2016ல் எய்ட்ஸ்க்கு 10 லட்சம் பேர் பலி

கடந்த 2016ல் எய்ட்ஸ் நோய்க்கு 10 லட்சம் பேர்

பலியாகியுள்ளது ஐ.நா., ஆய்வில் தெரியவந்துள்ளது.எய்ட்ஸ் நோய் தொடர்பான கருத்தரங்கில் ஐ.நா., சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: கடந்த 2016ல், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 3.65 கோடி பேரில், 1.95 கோடி பேர் சிகிச்சை பெற்றனர். அதே நேரத்தில் 10 லட்சம் பேர் இந்த நோய்க்கு மரணமடைந்தனர். இது கடந்த 2005ல் 19 லட்சமாக இருந்தது.கடந்த 2016ல் எய்ட்ஸ் நோயால் 18 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். 1997 ல் 35 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்.தற்போது உலகம் முழுதும் 7.61 கோடி பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயால் தற்போது வரை 35 கோடி பேர் மரணமடைந்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...