ஆதார் வழக்கு எழுப்பும் முக்கிய கேள்விகள்!!


சுப்ரீம் கோர்ட்டின் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு, ஆதார் வழக்கு

குறித்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் பிறபிக்கும் உத்தரவு, அனைத்து மக்களின் மீதும் விளைவை ஏற்படுத்தும் என்பதால், இந்த வழக்கு குறித்த ஐந்து முக்கிய கேள்விகளை நிபுணர்கள் முன் வந்துள்ளனர். அந்த கேள்விகள் வருமாறு:

ஆதார் செல்லதக்கதா

1. ஆதார் திட்டம் செல்லதக்கதா? அல்லது அரசியல் சட்டத்தை மீறி செயல்படுகிறதா? இந்த வழக்கில் ஆதார் திட்டத்தின் விவர தொகுப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்த விவர தொகுப்பை மறு தணிக்கை செய்ய வேண்டும் என நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதே நேரத்தில், ஆதார் திட்டம் செல்லதக்கதா என்ற கேள்வி சுப்ரீம் கோர்ட் முன் எழுப்பப்பட்டுள்ளது. ஆதார் சட்டத்தை எதிர்த்தும், அரசு திட்டங்களின் பலன்களை பெற தனித்துவ அடையாள எண்ணை கட்டாயமாக தெரிவிக்க வேண்டும் என்பதை எதிர்த்தும் தொடரப்பட்ட வழக்குகளை சுப்ரீம் கோர்ட் விசாரித்து வருகிறது.


முந்தைய காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், ஆதாருக்கு சட்ட ரீதியான பின்புலம் கிடையாது. ஆனால், பா.ஜ.,தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி அரசு, ஆதார் சட்டம் - 2016ஐ உருவாக்கியது. எனினும், பார்லிமென்ட்டில், இதை நிதி மசோதா போல் நிறைவேற்றியது எதிர்க்கட்சிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த அரசுக்கு ராஜ்யசபாவில் பெரும்பான்மை இல்லை. வழக்கமான மசோதா போல் அறிமுகப்படுத்தினால் ராஜ்யசபாவில் சிக்கல் ஏற்படும் என்பதால், நிதி மசோதா வழிமுறையை மத்திய அரசு பின்பற்றியது.

தனி நபர் உரிமை

2. ஆதார் என்பது மக்களின் தனி நபர் உரிமைக்கு இடையூறாக உள்ளதா? தனிநபர் உரிமை என்பது அடிப்படை உரிமையா?பல சமயங்களில், ஆதார் திட்டம், தனிநபர் உரிமையில் குறுக்கீடு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த காலத்தில், தனி நபர் உரிமை என்பது அடிப்படை உரிமை அல்ல என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த தீர்ப்பை பின்பற்றி எழுந்த விவாதம் மற்றும் சுப்ரீம் கோர்ட் கடந்த காலங்களில் பிறப்பித்த தீர்ப்புகள் குறித்து ஆய்வு செய்யவே ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வை சுப்ரீம் கோர்ட் ஏற்படுத்தி உள்ளது.


3. பான் கார்டுடன் ஆதார் இணைப்பு உட்பட, அனைத்து அரசு திட்டங்களின் பலன்களை பெற ஆதார் கட்டாயம் என்பதை மத்திய அரசு நியாயப்படுத்தி உள்ளதா?


மக்கள் மீது எதையும் திணிக்க அரசுக்கு உரிமை உள்ளதா? ஆதார் எண்ணுக்கு விண்ணப்பிக்க விரும்பாத மக்களின் நிலை என்ன? போன்ற சந்தேகங்களுக்கு சுப்ரீம் கோர்ட் பதில் அளிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆதார் கட்டாயம் என்பதை சுப்ரீம் கோர்ட்டில் இதுவரை மத்திய அரசு கூறவில்லை. ஆனால், அரசு திட்டங்களின் பலன்களை பெற ஆதார் கட்டாயம் என்பதை சிறிது சிறிதாக அமல்படுத்தி வருகிறது.

அரசு நியாயப்படுத்தியதா?

4. ஒரு அடையாள எண்ணை குறிப்பிட்டு, அதற்குள் மக்களை கட்டுப்படுத்தி, அரசியல் சட்டத்தில் மாற்றங்களை கொண்டு வருவதை மத்திய அரசு நியாயப்படுத்தி உள்ளதா?ஆதார் திட்டம் என்பதே அரசியல் சட்டத்தை திருத்தும் முயற்சி தான். அனைத்து மக்களின் தனிப்பட்ட விவரங்கள் முதல் முறையாக அரசுக்கு கிடைத்துள்ளது. இது அரசியல் சட்டப்படி சரியா என்பதை சுப்ரீம் கோர்ட் முடிவு செய்ய உள்ளது.


5. ஆதார் திட்டம் மூலம் அனைத்து மக்களின் கைரேகை உள்ளிட்ட விவரங்களை பெற மத்திய அரசுக்கு உரிமை உள்ளதா? இதில் விதிமீறல் ஏற்பட்டால் என்ன ஆகும்?


தனி நபர் உரிமை என்பதை விட, பாதுகாப்பு தான் ஆதார் முன் வைக்கும் முக்கிய கேள்வியாக உள்ளது. தங்களின் விவரங்களை திரட்டி வைக்கும் முயற்சியில் மத்திய அரசை மக்கள் நம்பலாமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது சரி தான் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கினால், ஆதார் திட்டம் மூலம் திரட்பட்ட விவர தொகுப்பை முழுமையாக பாதுகாப்ப முறையான நடைமுறையை மத்திய அரசு கண்டிப்பாக ஏற்படுத்தியாக வேண்டும்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...