பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதீஷ்குமார், ராஜ்பவனில் ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதம் அளித்தார். இதன்பிறகு நடந்தே வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
ஊழலை பொருத்துக்கொள்ளமாட்டேன். எனக்கு வேறு வழி தெரியாததால் ராஜினாமா செய்தேன். பீகார் மாநில வளர்ச்சிக்காக முடிந்த அளவுக்கு
உழைத்தேன். கூட்டணி உடையாமல் இருக்க கடைசி வரை போராடி பார்த்தேன். இதுதொடர்பாக ராகுல்காந்தியிடம் கூட பேசினேன். ஆனால் துணை முதல்வர் தேஜஸ்வி பதவியை ராஜினாமா செய்ய மாட்டார் என ராஷ்டிர ஜனதாதளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் அறிவித்துவிட்டார்.
இதுபோன்ற ஒரு சூழ்நிலைக்கு நடுவே என்னால் பணியாற்ற முடியாது. ஊழலை ஒழிக்க ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. இதனால்தான் வேறு வழியின்றி பதவியை ராஜினாமா செய்துள்ளேன் என்றார் அவர்.