நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலே மருத்துவப் படிப்பில் சேரலாம்.. வழிகாட்டுகிறது மெட்டா கல்வி சேவை !!

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எம்பிபிஎஸ் படிக்க வழிகாட்டுகிறது மெட்டா கல்வி சேவை மையம். குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களும் எம்பிபிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்பில் சேர ஆலோசனை வழங்குகிறது.
சென்னை காட்டுப்பாக்கத்தில் செயல்பட்டு வருகிறது மெட்டா கல்வி சேவை மையம். இங்கு நீட் தேர்வில்
தேர்ச்சி பெற்ற, குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர ஆலோசனை வழங்கி வருகிறது.

நீட் தேர்வு தமிழகத்தில் இந்தாண்டு முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் ஏராளமான மாணவர்கள் முதல் முறையாக நீட் தேர்வை எழுதியுள்ளனர்.
முதல்முறை நீட் தேர்வை எழுதியுள்ளதால் மாணவ, மாணவிகள் எவ்வாறு விண்ணப்பிப்பது? எப்படி கல்லூரிகளை தேர்வு செய்வது என குழம்பியுள்ளனர்.

இந்நிலையில் அவர்களுக்கு உதவும் வகையில் மெட்டா கல்வி சேவை மையத்தில் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வில் மருத்துவப்படிப்புக்கு தகுதியான மதிபெண்களை பெற்றுள்ள மாணவர்களுக்கு எந்த கோட்டாவில் எந்தக் கல்லூரியில் சேரலாம் என ஆலோசனை வழங்கப்படுகிறது.

மாணவர்கள் தங்களின் மதிப்பெண் விவரங்களோடு மெட்டா கல்வி சேவை மைய அதிகாரிகளை நேரில் சந்தித்து இலவச ஆலோசனை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மருத்துவ படிப்பை முடிக்கும் ஐந்தரை ஆண்டுகளும் மெட்டா கல்வி சேவை மையம் ஆலோசனை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மட்டும் மெட்டா கல்வி சேவை மையம் மூலம் 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெற்றுள்ளதாகவும் மெட்டா கல்வி சேவை மையம் தெரிவித்துள்ளது. மருத்துவப்படிப்பு தொடர்பான சந்தேகங்களுக்கு மாணவர்கள் 9865397965,9789846122,9843556776,9500115875 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...