அரசு பொது தேர்வில் சிறப்பிடம் பெறும் மாணவர்களுக்கு காமராஜர் விருது: அமைச்சர் செங்கோட்டையன்!!


தமிழகத்தில் நிகழாண்டு அரசு பொது தேர்வில் தமிழ் வழிக் கல்வியில் சிறப்பிடம்
பெறும் 960 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 1.45 கோடியில் பரிசு மற்றும் காமராஜர் விருது வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
விருதுநகரில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு சனிக்கிழமை கல்வித்திருவிழா நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:
பெருந்தலைவர் காமராஜர் விட்டுச் சென்ற பல்வேறு திட்டங்களை, இந்த அரசு நிறைவேற்றி வருகிறது. இப்பகுதியில், காமராஜரால் உருவாக்கப்பட்ட பள்ளிகளுக்கு அங்கீகாரம் வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். இதை அரசு பரிசீலித்து வருகிறது. தமிழகத்தில் நிகழாண்டு கூடுதலாக 200 தேர்வு மையங்களுக்குஅனுமதி வழங்கப்படும்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு புதிய திட்டங்களை இந்த அரசு அறிவித்து வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு இணையாக விளங்க வேண்டும் என்பதற்காக 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்காக ரூ.60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அனைத்து வகுப்புகளிலும் முற்றிலும் கணிணி மயமாக்க ரூ. 364 கோடி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. அதற்கான அறிவிப்பு ஒரு மாதத்தில் வெளிவர உள்ளது.
பொதுத் தேர்வு குறித்து மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை. 54 ஆயிரம் கேள்விகள், அதற்கான விடைகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாணவர்கள் அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெற முடியும். தமிழகத்தில் நிகழாண்டு அரசுபொதுதேர்வில் தமிழ் வழிக் கல்வியில் சிறப்பிடம் பெறும் 960 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1.45 கோடியில் பரிசு மற்றும் காமராஜர் விருது வழங்கப்பட உள்ளது என்றார் அவர்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, கே.டி ராஜேந்திரபாலாஜி, முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன், தமிழகஅரசின் புதுதில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், மக்களவை உறுப்பினர் ராதாகிருஷ்ணன் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடார் மகாஜன சங்க பொது செயலாளர் கரிக்கோல்ராஜ், கேவிஎஸ் ஆண்கள் மேல்நிலை பள்ளி செயலாளர் சபரிமுத்து உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...