எழுத்து தேர்வில் அசத்தியவர்கள் உடற்தகுதி தேர்வில் 'தோல்வி' !!

போலீஸ், இரண்டாம் நிலை காவலர்களுக்கான *எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற பொறியியல் பட்டதாரிகள், உடற்தகுதி தேர்வில், வெற்றி பெற முடியாமல், வெளியேறி உள்ளனர்.
*6.32* லட்சம் பேர், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வாயிலாக, போலீஸ், சிறைத் துறை, தீயணைப்புத் துறைகளில் காலியாக உள்ள 15,711
இரண்டாம் நிலை காவலர்கள் காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வுக்கு ஜன., 23ல் அறிவிப்பு வெளியானது.

தேர்வுக்கு, *6.32* லட்சம் பேர் விண்ணப்பித்தனர் *மே 21ல் நடந்த எழுத்து தேர்வில், *4.82* லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவு ஜூலை 7ல் இணையதளத்தில் வெளியானது. வெற்றி பெற்றவர்களில் 18%  பொறியியல் பட்டதாரிகள், 20% இளநிலை & முதுநிலை பட்டதாரிகள்.
வெற்றி பெற்ற 90,185 பேருக்கு, உடல் தகுதித் தேர்வுகளுக்கான அழைப்பு அனுப்பப்பட்டது.

ஜூலை 27ல்
உடல் தகுதி தேர்வு துவங்கியது,
*கடந்த மூன்று நாட்கள் நடந்த உடல் தகுதி தேர்வில் கலந்து கொண்ட பொறியியல் பட்டதாரிகளில் பெரும்பாலானோர், தோல்வியை சந்தித்து* வெளியேறி உள்ளனர்.
தேர்வு பணியில் ஈடுபட்டு வரும், *DSP* ஒருவர் கூறியதாவது, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, தற்போது, *எழுத்துத் தேர்வில், பொறியியல்  பட்டதாரிகள், முதுகலை & இளங்கலை பட்டதாரிகள், அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால், அவர்களால், உடல் தகுதி தேர்வில் வெற்றி பெற முடியவில்லை.*
உடல் தகுதி தேர்வில் கலந்து கொண்ட பொறியியல்
பட்டதாரிகளில், *3%* மட்டுமே தேர்ச்சிபெற்றனர்.
அடுத்த சில நாட்களில் நடைபெற உள்ள *கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல், 400 மீ ஓட்டத்திலும், வெற்றி பெற்றால் மட்டுமே, அவர்கள் தேர்வாக வாய்ப்புள்ளது.*
கடந்த மூன்று நாட்கள் நடந்த தேர்வில், *+2, விளையாட்டு வீரர்கள் & ஐ.டி.ஐ.,யில் தேர்ச்சி பெற்றவர்கள் தான்,* அதிக அளவில் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
*குறிப்பாக, நகர்ப்புற மாணவர்களை விட, கிராமப் புற மாணவர்கள் தான் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.*

இவ்வாறு
*அவர்கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...