கிராம் எடையுள்ள செயற்கைக்கோள் பூமிக்கு அருகில் உள்ள கோள அடுக்கில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தச் செயற்கைக்கோள் இஸ்ரோவின் முன்மாதிரியான (prototype versions) பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. மேலும், இந்தச் செயற்கைக்கோளுக்கு ‘ஸ்ப்ரைட்ஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இதனுடன் சிறிய சோலார் பேனலும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சோலார் பேனல் தனக்கு தேவையான ஆற்றலை, சூரிய ஒளியைப் பயன்படுத்தி தானே தயாரித்துக்கொள்ளும் தன்மையுடையது. இது மிகச்சிறிய விண்கலமாக இருந்தாலும் ஒரு கிராமுக்கு 100 மில்லியன் தகவல்களைச் சேகரித்துச் செயற்கைக்கோளுக்கு அனுப்பும் தகுதியுடையது. இந்தச் செயற்கைக்கோள் போன்று ஐந்தாண்டுகளுக்குத் தேவையான செயற்கைக்கோளைத் தயாரிப்பதற்கு ரூ.641 கோடி செலவிடப்பட்டுள்ளது.
வேற்று கிரகம் குறித்த தகவல்களை அறிவதற்காக இதுபோன்ற செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
