கல்லாக மாறிவரும் இரட்டையர்கள் !!

மாறிவரும் காலத்துக்கேற்ப நோய்களும் பலவிதமாக விநோத முறையில் உருவாகி வருகிறது. இந்நிலையில், அயர்லாந்தின் வடக்குப் பகுதியைச் சேர்ந்த இரட்டைச் சகோதரிகள், அரிய நோயால் பாதிக்கப்பட்டு மெல்ல மெல்லக் கல்லாக மாறி வருகின்றனர்.



வட அயர்லாந்தின் ஆண்ட்ரிம் கவுண்டி பகுதியில் ஜோ பக்ஸ்டன் (26) மற்றும் லூசி ஃப்ரெட்வெல் (26) என்ற இரட்டையர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ஃபிப்ரோடிஸ்பிளாசியா ஒஸ்ஸிஃபிகன்ஸ் ப்ரோகரிசிவா என்ற அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், தசை திசு, தசை நார்கள் மற்றும் தசை நாண்கள், எலும்புகள் இறுக்கமடைந்து கல் போன்று மாறிவருகிறது.

இந்த நோயை எஃப்.ஓ.பி. (FOP) என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த இரட்டையர்கள் எட்டு வயது இருக்கும்போது எஃப்.ஓ.பி. பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. உலகில் இதுவரை 800 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐந்து வயதில் ஜோ பக்ஸ்டன் சோபாவில் இருந்து கீழே விழுந்தார். அதில், அவர் முழங்கை உடைந்துவிட்டது. அதற்குச் சிகிச்சை எடுத்தும், எந்தவித பலனும் இல்லை. அதன்பின் எட்டு வயதில் இருவருக்கும் கால் விரல்களில் கட்டி ஒன்று வளர்ந்துள்ளது. இது எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

லூசியும், எட்டாவது வயதில் ஒரு விபத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதில், ஜோ பக்ஸ்டன் மட்டும் திருமணமானவர். தற்போது, இரட்டையர்கள் தங்களுடைய உடலின் எந்தப் பாகத்தையும் அசைக்க முடியாமல் தவிக்கின்றனர். ஜோ திருமண வாழ்வில் ஈடுபட வேண்டும் என நினைக்கிறார். ஆனால், எதிர்காலத்தில் இந்த நோய் தன்னுடைய குழந்தைகளுக்கும் பரவ வாய்ப்புண்டு என மருத்துவர்கள் கூறியுள்ளனர். தற்போது இருவரும் லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் விரைவில் குணமடைந்து விடுவோம் என்ற நம்பிக்கையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...