குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 17ஆம் தேதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக 1950ஆம் ஆண்டு டாக்டர் இராஜேந்திர பிரசாத் பதவியேற்றார். அதன்பிறகு பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் நாட்டின் முதல் குடிமகனாகப் பதவி வகித்துள்ளனர். தற்போதைய குடியரசுத் தலைவரான பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வருகிற 25ஆம் தேதியுடன்
முடிவடைகிறது. இதனால் புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. அதன்படி ஆளும்கட்சியான பாரதிய ஜனதா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் ராம்நாத் கோவிந்த்தும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் மீரா குமாரும் குடியரசுத் தலைவர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர்.
எல்லா ஏற்பாடுகளும் முடிந்து, நாடு முழுக்க நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கும் வகையில், ஜூலை 17ஆம் தேதி கடந்த திங்கட்கிழமை காலை 10 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை நாடெங்கிலும் குடியரசுத் தலைவர் தேர்தலைத் தேர்தல் ஆணையம் நடத்தி முடித்திருக்கிறது. அதன்படி பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று எண்ணப்படுகின்றன. இதன் முடிவுகள் இன்றைய தினமே அறிவிக்கப்படவிருக்கின்றன. கட்சிகளின் வாக்கு எண்ணிக்கை மற்றும் யாருக்கு யார் ஆதரவு என்பன முன்கூட்டியே தெரிந்ததால், பெரும்பான்மை பலம் பெற்ற பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெறுவார் என பலரும் முடிவுகளை முன்கூட்டியே கணித்துள்ளனர். இருப்பினும் இன்று வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவிருப்பதால், நாட்டின் 14ஆவது குடியரசுத் தலைவர் யார் என்பதற்கான விடை தெரிந்துவிடும். இதைத்தொடர்ந்து துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல் வேலைகளில் அனைத்துக்கட்சியினரும் தீவிரமாக கவனம் செலுத்துவார்கள் எனக் கருதப்படுகிறது.