பணியமர்த்தலைக் குறைத்த ஐ.டி நிறுவனங்கள்


டி.சி.எஸ், இன்ஃபோசிஸ் ஆகிய முன்னணி ஐ.டி நிறுவனங்கள் தங்களின் பணியமர்த்தலைக்
கணிசமாக குறைத்துக் கொண்டுள்ளன.

ஐ.டி பணியிழப்புகள் சமீபத்தில் முக்கியப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. பல நிறுவனங்கள் தங்களின் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொண்டு வருகின்றன. டி.சி.எஸ் மற்றும் இன்ஃபோசிஸ் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவின் முன்னணி ஐ.டி நிறுவனங்களாகும். பலருக்கும் வேலைவாய்ப்புகளை வழங்கி வந்த இந்நிறுவனங்கள் தற்போது தங்களின் பணியமர்த்தலைக் குறைத்துக் கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்நிறுவனங்களின் நிகர ஊழியர் பணியமர்த்தல் கடந்த ஆண்டை விடக் குறைந்துள்ளது..

2016-17ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில், டி.சி.எஸ் நிறுவனம் 8,726 ஊழியர்களைப் பணியில் அமர்த்தியுள்ளது. மேலும் இன்ஃபோசிஸ் நிறுவனம் 601 ஊழியர்களைப் பணியில் அமர்த்தியுள்ளது. ஆனால் 2017-18ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில், டி.சி.எஸ் நிறுவனத்தின் பணியமர்த்தலில் 1,414 பணியிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பணியமர்த்தலில் 1,811 பணியிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது.

‘இக்னியோ’ போன்ற ரோபோட்டிக் தொழில்நுட்பங்களால் ஆட்டோமேஷன் (தானியங்கல்) செய்யப்படுவதாலேயே ஐ.டி நிறுவனங்களில் பணியமர்த்தல் குறைவதாகவும், பணியிழப்புகள் அதிகரிப்பதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...