ஐ.ஏ.எஸ். அதிகாரியின் கல்வி சேவை


பள்ளியில் நிலவிய ஆசிரியர் பற்றாக்குறையால் படிப்பு பாதிக்கப்பட்ட மாணவிளுக்கு
பாடம் நடத்துவதற்காக தனது மனைவியை பணியமர்த்தியிருக்கிறார், ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர். அவர் பெயர் மங்கேஷ் ஹில்தியால். உத்தரபிரதேச மாநிலம் ருத்ரபிரயாக்கில் பணியாற்றுகிறார். இவருடைய மனைவி அமர் உஜாலா தாவர நோயியியல் சார்ந்த பாடத்தில் பி.எச்டி. முடித்தவர்.

மங்கேஷ் ருத்ரபிரயாக் நகரில் உள்ள உயர்நிலைப்பள்ளிக்கு ஆய்வு மேற்கொள்ள சென்றிருக்கிறார். அப்போது அந்த பள்ளியில் அறிவியல் ஆசிரியர் பற்றாக்குறை நிலவியிருக் கிறது. அதனால் 9-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளின் படிப்பு பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. மாணவிகளிடம் குறைகளை கேட்டவர் மனதில் அறிவியல் சம்பந்தப்பட்ட படிப்பு படித்திருக்கும் தன் மனைவியை தற்காலிகமாக பணியமர்த்தும் எண்ணம் தோன்றியிருக்கிறது. இது பற்றி தன் மனைவியிடம் பேசியிருக்கிறார். அவரும் சம்மதம் தெரிவிக்க, பள்ளி முதல்வரின் அனுமதி பெற்று புதிய ஆசிரியர் நியமிக்கப்படும் வரை தன் மனைவியை ஆசிரியராக பணியை தொடர செய்துவிட்டார். உஷா 9-வது மற்றும் 10-வது வகுப்பு மாணவிகளுக்கு தினமும் இரண்டரை மணி நேரம் அறிவியல் பாடம் நடத்துகிறார்.

“வழக்கமான ஆய்வு பணிக்காக பள்ளிக்கு சென்றபோது அறிவியல் ஆசிரியர் இல்லாததை அறிந்தேன். ஆசிரியர் இல்லாததால் மாணவிகளின் படிப்பு பாதிக்கப்படக்கூடாது என்ற எண்ணத்தில் என் மனைவியை தன்னார்வலராக பணிபுரியுமாறு கேட்டுக் கொண்டேன். ஆசிரியர் பணியிடம் விரைவில் நிரப்பப்படும். அதுவரை, என் மனைவி சேவையை தொடர்வார்” என்கிறார், மங்கேஷ்.

உஷாவின் அமைதியான சுபாவமும், எளிதில் பாடங்களை மனதில் பதிய வைக்க மேற்கொள்ளும் நுணுக்கங்களும் மாணவிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக் கிறது. “ஆசிரியர் இல்லாததால் படிப்பு பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்விக்கு என்னால் முடிந்த பங்களிப்பை வழங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது” என்கிறார் உஷா.

மங்கேஷ் நிர்வாக திறன்மிக்க, பொறுப்பான அதிகாரி என்று பெயரெடுத்தவர். 2011-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பொறுப்பேற்றவர். ஏற்கனவே ஐ.எப்.எஸ். அதிகாரி பணிக்கு தேர்ச்சி பெற்றிருந்தபோதிலும் ‘ஐ.ஏ.எஸ்.’ ஆக வேண்டும் என்ற முனைப்புடன் மீண்டும் முயற்சித்து இந்த பணியை தேர்ந்தெடுத்திருக்கிறார். அரசு நலத்திட்டங்கள் பொதுமக்களிடம் எளிதாக சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் முழுமூச்சோடு செயல்பட்டு வரு கிறார். அதனால் அவருக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல மதிப்பு இருக்கிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...