பார்லி., கேன்டீனில் சிலந்தி கிடந்த பொங்கலை சாப்பிட்ட மூத்த அதிகாரி உடல் பாதிக்கப்பட்டதையடுத்து
கேன்டீன் உணவின் தரம் கேள்வி குறியாகியுள்ளது.
டில்லி பார்லிமென்ட் வளாகத்தில் அமைந்துள்ள கேன்டீனில் எம்.பி.க்கள், மற்றும் ஊழியர்களுக்கு மலிவு விலையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் இங்கு மதிய உணவு சாப்பிட்ட பார்லி. அலுவலக மூத்த அதிகாரி ஒருவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது.
அந்த அதிகாரி கூறுகையில்,பார்லி. கேன்டீனில் மதிய உணவு சாப்பிட பொங்கல் மற்றும் தயிர்சாதம் கேட்டிருந்தேன். அப்போது பொங்கலில் சிலந்தி கிடந்ததை சரியாக கவனிக்காமல் சாப்பிட்டுவிட்டேன் இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டது என்றார்.
இதையடுத்து உணவு தயாரிப்பில் கவனக்கறைவாக இருந்த கேன்டீன் ஊழியர்கள் மீது அவர் புகார் கூறியுள்ளார்