10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செப். 11 முதல் காலாண்டு தேர்வு தொடக்கம் !!

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்புக்கு, 2017-2018ம் நடப்பு கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொதுத்தேர்வு அடிப்படையில் அரசு தேர்வுத்துறை காலாண்டு தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது.

 பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கு செப்டம்பர் 11ம் தேதி தமிழ் முதல்தாளும், 12ம் தேதி தமிழ்
இரண்டாம் தாளும், 13ம் தேதி ஆங்கிலம் முதல் தாளும், 14ம் தேதி ஆங்கிலம் 2ம் தாளும், 15ம் தேதி தாவரவியல், உயிரியல், வரலாறு, வணிக கணிதம் ஆகிய பாடங்களுக்கும், 18ம் தேதி கணிதம், உயிரி தாவரவியல், விலங்கியல்,
நியூட்ரிசன், கணக்கு பதிவியல் மற்றும் ஆடிட்டிங் ஆகிய பாடங்களுக்கும்,
19ம் தேதி கணினி அறிவியல், உயிரி வேதியியல், புள்ளியியல் ஆகிய பாடங்களுக்கும், 20ம் தேதி வணிகவியல், புவியியல் ஆகிய பாடங்களுக்கும், 21ம் தேதி இயற்பியல், பொருளாதாரம் ஆகிய பாடங்களுக்கும், 29ம் தேதி வேதியியல், கணக்கு பதிவியல் பாடங்களுக்கும் தேர்வு நடக்கிறது.

 10ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 11ம் தேதி தமிழ் முதல்தாளும், 12ம் தேதி தமிழ் இரண்டாம் தாளும், 14ம் தேதி ஆங்கிலம் முதல் தாளும், 15ம் தேதி ஆங்கிலம் இரண்டாம் தாளும், 18ம் தேதி கணிதம் பாடத்துக்கும், 20ம் தேதி அறிவியல் பாடத்துக்கும், 23ம் தேதி சமூக அறிவியல் பாடத்துக்கும் தேர்வு நடக்கிறது. இவ்வாறு அந்த அட்டவணையில் கூறப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...