மனிதர்களின் வேலையை எளிமையாகச் செய்து முடிக்க ரோபோ உருவாக்கப்பட்டது. தற்போது பெரும்பாலான துறைகளில் ரோபோக்கள் பயன்படுத்தபட்டு வருகின்றன. மருத்துவத்துறையில், மனிதர்களின் உடலில் ஆபரேஷன் செய்ய புதிய ரோபோ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
மிகச் சிறியதாக இருக்கும் இந்த ரோபோவை இங்கிலாந்து விஞ்ஞானிகள் காது, மூக்கு, தொண்டைக்கு அறுவைசிகிச்சை செய்ய உருவாக்கியுள்ளனர். கேம்பிரிட்ஜ் பகுதியில் 100 விஞ்ஞானிகள் மற்றும் இன்ஜீனியர்கள் சேர்ந்து இதை உருவாகியுள்ளனர். இந்த ரோபோ மனிதக்கைகளைப் போல் வடிவமைக்கப்பட்டு, ‘எவர்சியஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. குடல் இறக்கம் சீரமைப்பு, கண், காது, மூக்கு, தொண்டை உள்ளிட்ட ஆபரேஷன்களைச் செய்ய இந்த ரோபோவைப் பயன்படுத்த முடியும்.
இதனால் குறைந்த செலவில் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க முடியும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மருத்துவர்களின் உதவியுடன் ஆபரேஷன் தியேட்டரில் உள்ள ‘3 டி’ திரையின்மூலம் இந்த ஆபரேஷனை நிபுணர்கள் நடத்திக்காட்டினர். இது பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்டு வருவதாக கேம்பிரிட்ஜ் நிபுணர்கள் தெரிவித்தனர்.