குரூப் 2- ஏ தேர்வு: 25% பேர் பங்கேற்கவில்லை


தமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2- ஏ தேர்வு நேற்று (ஆகஸ்ட்,6) நடைபெற்றது.


தமிழக அரசின் துறைகளில் உள்ள உதவியாளர் பதவி, தலைமைச் செயலகம் மற்றும் டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நேர்முக எழுத்தர் பதவி, தலைமைச் செயலகத்தில் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவி உள்ளிட்ட 41 துறைகளில் காலியாக உள்ள 1,953 இடங்களை நிரப்புவதற்கு 7,57,359 பட்டதாரிகள் விண்ணப்பித்து இருந்தனர். அதில்,7,52,916 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 4,443 விண்ணப்பங்கள் தகுதி இல்லாததால் தள்ளுபடி செய்யப்பட்டன. அவர்களுக்குக் கடந்த வாரம் ஆன்லைனில் ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று காலை (ஆகஸ்ட்,6) 10 மணி முதல் 1 மணி வரை 2,536 தேர்வு மையங்களில் குரூப் 2- ஏ தேர்வு நடைபெற்றது. பதற்றமான 31 மையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. சென்னையில் 259 மையங்களில் தேர்வு நடந்தது. மொத்தம் 5,65,000 பேர் தேர்வெழுதினர். சுமார் 25 % (1,87,916) பேர் தேர்வு எழுத வரவில்லை.

இதுகுறித்து தேர்வு எழுதியவர்கள், ‘ஒவ்வொரு கேள்விக்கும் ஒன்றரை மதிப்பெண் வீதம் மொத்தம் 200 கேள்விகளுக்கு 300 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடைபெற்றது. மொழித்தேர்வு 150 மதிப்பெண்களுக்கும், பொது அறிவு தேர்வு 150 மதிப்பெண்களுக்கும் இருந்தது. மொழித்தேர்வில் கேள்விகள் எளிதாக இருந்தன. ஆனால் பொது அறிவு தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்தன. இந்தத் தேர்வில் பொது அறிவு கேள்வி பகுதியில் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றம் தொடர்பான கேள்விகளும் கேட்கப்பட்டது’ எனத் தெரிவித்துள்ளனர்.

மொழித்தேர்வில் பலரும் தமிழை தேர்ந்தெடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...