இறப்பு சான்றிதழுக்கு விலை ரூ.2,000

ராயபுரம் மண்டல அலுவலகத்தில், இறப்பு சான்றிதழ் பெற, 2,000 ரூபாய் லஞ்சம் வாங்கப்படுவதால்,
பொதுமக்கள் அவதியடைகின்றனர்.சென்னை, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், சாலை விபத்தில் பலியானவர், நோயால் இறந்தவர், கொலை, தற்கொலையால் இறப்போர் உடல்கள், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. இறந்தவரின் விபரங்கள் அடங்கிய ரசீது, குடும்பத்தினருக்கு வழங்கப்படுகிறது.ராயபுரம் மண்டல அலுவலகத்தில், இறப்பு சான்றிதழ் வழங்கப்படுகிறது. அந்த சான்றிதழ் பெற, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, மருத்துவமனை ரசீது உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் அளிக்கின்றனர். ஆனால், மாநகராட்சி ஊழியர்கள், ஏதாவது காரணம் கூறி, சான்றிதழ் வழங்காமல் அலைக்கழிக்கின்றனர்.ஒரு வாரம் அலையவிட்டு, 2,000 ரூபாய் பணம் கேட்கின்றனர்; பணம் கொடுத்தஉடன், சான்றிதழ் கிடைக்கிறது என, பாதிக்கப்பட்டோர் குற்றம் சாட்டுகின்றனர்.இது குறித்து, பாதிக்கப்பட்ட ஒருவர் கூறியதாவது:சில மாதங்களுக்கு முன், என் தந்தை உயிரிழந்தார். வீட்டு முகவரி எண் தவறாக உள்ளதாக கூறி, இறப்பு சான்றிதழ் தராமல் அலைக்கழித்தனர். 1,500 ரூபாய் லஞ்சம் கொடுத்த பின், சான்றிதழ் கிடைத்தது.மருத்துவமனை, மாநகராட்சி ஊழியர்கள் இணைந்து, இந்த செயலில் ஈடுபடுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...