சுற்றுச்சூழலைப் பாதுகாக்க சோலார் ஆட்டோ!*


சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் கேரளாவில் ஓசையில்லாத சோலார் ஆட்டோவை
இயக்க கேரள வனத்துறை திட்டமிட்டுள்ளது. இந்த முயற்சி வெற்றியடையும்பட்சத்தில் மாநிலத்தின் அனைத்து வனவிலங்கு சரணாலயங்களிலும் இந்த சோலார் ஆட்டோவை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சுற்றுலா வாகனங்களின் சத்தம் வனவிலங்குகளுக்கு இடையூறாக இருப்பதால் அவைகளால் இயற்கையான சூழலில் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பெரியாறு புலிகள் சரணாலயப் பகுதிக்குள் சுற்றுலா வாகனங்களை அனுமதிக்கக் கூடாது என கேரள வனத்துறைக்குத் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் 2014ஆம் ஆண்டு கடிதம் அனுப்பியது.

இதனால் குமுளி அருகே உள்ள ஆனவச்சால் பகுதியில் சுமார் 300 வாகனங்கள் நிறுத்தக்கூடிய பார்க்கிங் வசதிக்கான இடத்தை கேரள வனத்துறை தேர்வு செய்தது. இந்த ஆண்டு மார்ச் 1ஆம் தேதி தேக்கடி ஆனவச்சால் பகுதியில் கார் பார்க்கிங் வசதி நடைமுறைக்கு வந்தது. தற்போது தேக்கடிக்கு வரும் அனைத்து வாகனங்களும் ஆனவச்சால் பார்க்கிங் பகுதியில் வாகனங்களை நிறுத்திவிட்டு, அங்கிருந்து கேரள வனத்துறையினரின் டெம்போ டிராவலர் வண்டியில் தேக்கடி சென்று திரும்ப வேண்டும். இதற்கு இருபது ரூபாய் கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில், சுற்றுலாப்பயணிகளுக்காக தேக்கடி கேரள வனத்துறை சோதனைச்சாவடியிலிருந்து படகுத்துறை வரை ஓசை இல்லாத சோலார் ஆட்டோ இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சோதனை ஓட்டத்துக்காக முதல் ஆட்டோ வந்துள்ளது. ஐந்து நபர்கள் செல்லக்கூடிய இந்த ஆட்டோவின் வாகன பதிவு முடிந்தவுடன் அதை இயக்க முடிவு செய்துள்ளனர். மேலும் இந்த முயற்சி வெற்றியடைந்தால், வனத்துறையின் மற்ற வாகனங்களை நிறுத்திவிட்டு சோலார் ஆட்டோவை மட்டுமே பயன்படுத்தவும், மாநிலத்தின் அனைத்து வனவிலங்கு சரணாலய சுற்றுலாப்பகுதியிலும் இதை நடைமுறைப்படுத்தவும் கேரள வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...