புதிய 200 ரூபாய் நோட்டுகள் நாளை முதல்
பயன்பாட்டுக்கு வர இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சாமானியர்களின் பணப் பரிவர்த்தனைகளை எளிதாக்குவது உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு புதிய 200 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பின் போது 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்பட்டு, புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், புதிய 2,000 ரூபாய் நோட்டுகளுக்கான சில்லறை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் சில்லறை தட்டுப்பாட்டைப் போக்க ஆயிரம் ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. அதிலும், குறிப்பாக புதிய 200 ரூபாய் நோட்டு என்கிற ரீதியில் புகைப்படம் ஒன்றும் சமூக வலைதளங்களில் உலா வந்தது. இந்தநிலையில், புதிய 200 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட இருப்பதை அரசாணை மூலம் மத்திய அரசு நேற்று உறுதிப்படுத்தியது. இந்தநிலையில், பிரகாசமான மஞ்சள் நிறத்தில் புதிய 200 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மகாத்மா காந்தியின் புகைப்படத்துடன் வெளியாகும் இந்த ரூபாய் நோட்டில் சாஞ்சி ஸ்தூபம் இடம்பெற்றுள்ளது.