மாறுதலுக்கு குறைந்தது ரூ.5 லட்சம் : மன உளைச்சலில் செவிலியர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகள்!!!


டிரான்ஸ்பருக்கு கொடுத்த கடனை அடைக்க லோன் வாங்கியதால்
, பாதி சம்பளம் மட்டுமே பெரும் அரசு மருத்துவமனை செவிலியர்கள் பணியை திறம்பட செய்ய முடியாமல் மன உளைச்சலில் உள்ளனர். தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொகுப்பூதியத்தின் அடிப்படையில்  செவிலியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் 3 வருடங்கள் பணியாற்றிய பின், காலமுறை ஊதியத்திற்குள் கொண்டுவரப்படுவர். மேலும் இவர்களது பணி நிரந்தரம் செய்யப்பட்டு, பணி இடமாறுதலும் செய்யப்படுவர். அப்போது சொந்த மாவட்டத்திற்கோ, சொந்த மாவட்டத்திற்கு அருகிலோ மாற்றாமல் சம்பந்தமே இல்லாத மாவட்டத்திற்கு உதாரணமாக, நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர்களை விழுப்புரம் மாவட்டத்திலும்.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை வேலூர் மாவட்டத்திலும் மாறுதல் செய்து விடுகின்றனர். இப்படி சம்பந்தம் இல்லாத இடத்தில் பணியிடம் ஒதுக்கப்படும் செவிலியர்கள், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் தங்கள் பணியை திறம்பட செய்ய முடியாமல் மன உளைச்சலில் உள்ளனர். மீண்டும் சொந்த மாவட்டங்களுக்கு டிரான்ஸ்பர் கேட்டு, சம்பந்தப்பட்ட துறையை அனுகினால் ரூ.5 லட்சம் முதல் 7 லட்சம் வரை கொடுத்தால்தான் டிரான்ஸ்பர் கிடைப்பதாக கூறப்படுகிறது. மதுரை அரசு மருத்துவமனைக்கு சமீபத்தில் 25க்கும் மேற்பட்ட செவிலியர்களும், சில செவிலிய கண்காணிப்பாளர்களும் இதுபோல் ரூ.6 லட்சம் வரை கொடுத்துதான்  டிரான்ஸ்பர் வாங்கி வந்திருக்கின்றனர்.
இதை போல் நகராட்சி நிர்வாகத்திலும் 20 முதல் 25 லட்சம் வாங்குகிறார்கள் என் பல நகராட்சி அதிகாரிகள் புலம்பி வருகிறார்கள்

இவர்கள் பணியில் சேர்ந்ததுமே, முதல்வர் அலுவலகம் மூலமாக வங்கியில் தனிநபர் கடன் கேட்டு மனு செய்தனர். இதன்பின்தான் லஞ்சம் கொடுத்த விவகாரம் வெளியே கசிந்துள்ளது. ஒரே நேரத்தில் பலர் கடன் கேட்டு மனு செய்தது குறித்து விசாரித்த போதுதான், இவர்களில் பலர் டிரான்ஸ்பருக்காக அதிக வட்டிக்கு கடன் வாங்கியிருப்பதாக தெரிவித்தனர். அந்த கடனை அடைக்கத்தான் இப்படி தனிநபர் கடன் கேட்டு மனுசெய்திருப்பதும் தெரிந்தது. பாதிக்கப்பட்ட சிலர் கூறும் போது, 'முன்பெல்லாம் பணம் கொடுத்தால்தான் போஸ்டிங் கிடைக்கும், இதில் பணம் பெறும் அரசியல்வாதியோ, அரசு அதிகாரியோ  சிக்கிக்கொள்ள வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனால் மெரிட் அடிப்படையில் பணிகளை வழங்கி விட்டு, டிரான்ஸ்பரில் பணம் பார்க்கின்றனர்.

மீண்டும் டிரான்ஸ்பர் கேட்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில், சம்பந்தமே இல்லாத இடங்களில் போஸ்டிங் போட்டு விடுகின்றனர். பின்னர் மாறுதல் கேட்டு மனு செய்யும் போது, அவர்களை பல முறை அலைய வைத்து, ரூ.5 முதல் 7 லட்சம் வரை பேரம் பேசப்பட்டு, அதன்பின்தான் அவர்கள் கேட்ட பணியிட மாறுதல் கிடைக்கிறது. இந்தப்பணத்தை பலர் அதிக வட்டிக்கும், நகைகளை அடகு வைத்தும், சிலர் உறவுகளிடம் கடன் வாங்கியும்தான் கொடுக்கின்றனர். அலுவலகம் மூலம் வங்கியில் தனிநபர் கடன் பெற்று கடனை அடைக்கின்றனர். இவர்களுக்கு மாத ஊதியம் ரூ.30 ஆயிரம். இதில் ரூ.5 லட்சம் லோன் வாங்கினால், ஊதியத்தில் ரூ.15 ஆயிரம் பிடித்துக்கொள்வார்கள், மீதமுள்ள ரூ.15 ஆயிரத்தை வைத்துத்தான் இவர்கள் குடும்பம் நடத்த வேண்டும். இந்த ஊதியத்தை வைத்து குடும்பம் நடத்த முடியாமல் பலர் அவதிப்படுகின்றனர். இதனால் நோயாளிகளை பாதுகாக்கும் தங்களது உன்னதமான பணியை திறம்பட செய்ய முடியாமல் செவிலியர்கள் மன உளைச்சலில் உள்ளனர்’’ என்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...