புதுடெல்லி ₹200 நோட்டு வெளியிடப்படுவது குறித்து நிதியமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கருப்பு பணம் மற்றும் கள்ளநோட்டை போக்க பழைய ₹500 மற்றும் ₹1,000 நோட்டு செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இவற்றுக்கு மாற்றாக புதிய ₹2,000, ₹500 நோட்டு வெளியிடப்பட்டன. இருப்பினும் சில்லரை தட்டுப்பாடு தீரவில்லை. இதற்காக புதிய ₹20, ₹50 நோட்டுகளும் வெளியிடப்படுகின்றன. ஆனால், வரலாற்றிலேயே முதல் முறையாக 200 ரூபாய் நோட்டு வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் மத்திய நிதியமைச்சகம் இதுகுறித்து அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில், ரிசர்வ் வங்கியின் இயக்குநர் குழு பரிந்துரை மற்றும் ரிசர்வ் வங்கி விதிகளின்படி ₹200 நோட்டு வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் கூறுகையில் ₹200 நோட்டு இந்த மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியாகலாம். ₹100க்கும் ₹500க்கும் இடையே குறைந்த மதிப்புடைய நோட்டு இல்லை. எனவே இந்த புதிய மதிப்பிலான ரூபாய் நோட்டு சில்லரை தட்டுப்பாட்டை தீர்க்க உதவும் என தெரிவித்தன.