6 ஆண்டில் 3 ஆயிரம் குழந்தைகள் பலி; உ.பி.,யில் அதிர்ச்சி


உ.பி., கிழக்கு பகுதியில் 6 ஆண்டுகளில் 3 ஆயிரம் குழந்தைகள் பலியாகியுள்ளனர் அரசின் புள்ளி
விவரத்தில் தெரியவந்துள்ளது.

புறக்கணிப்பு:

உ.பி.,யில் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள பாபா ராகவ் தாஸ் மருத்துவமனை கல்லூரியில் கடந்த 5 நாளில் 63 குழந்தைகள் பலியாகியுள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அந்த மருத்துவமனையில் கடந்த 2012 முதல் தற்போது வரை 3 ஆயிரம் குழந்தைகள் பலியாகியுள்ளனர். மேலும், கடந்த 30 வருடங்களில், அங்கு ஜப்பானிய மூளைகாய்ச்சல் உள்ளிட்ட சில காய்ச்சல் காரணமாக 50 ஆயிரம் குழந்தைகள் இறந்துள்ளனர். மாநிலத்தை இத்தனை வருடம் ஆட்சி செய்தவர்கள், மருத்துவமனையை தொடர்ச்சியாக புறக்கணித்ததால் தான் இவ்வளவு பேர் இறந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காத்திருப்பு:

அதிகாரி ஒருவர் கூறுகையில், மூளைக்காய்ச்சல் பிரிவில் பெரும்பான்மையான குழந்தைகள் இறந்துள்ளனர். இதற்கு, மருத்துவமனை குறித்து போதிய அக்கறை செலுத்தாதே காரணம். கொசுக்களால், ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட இந்த மருத்துவமனைக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. கடந்த மே மாதம், மருத்துவ வார்டுகளை பராமரித்தல், ஐசியு, மருத்துவ உபகரணங்கள், வென்டிலேட்டர் உள்ளிட்டவைக்காக ரூ.37 கோடி ஒதுக்கீடு கேட்டு மாநில அரசுக்கு அறிக்கை அனுப்பினர். இதனை, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. ஆனால், நிதிஇன்னும் கிடைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

நிரந்தரமாக...

அந்த மருத்துவ கல்லூரியின் முன்னாள் முதல்வர் கூறுகையில், ஜப்பானிய மூளைகாய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை பெறுபவர்கள் குறித்த வழிமுறைகள் உருவாக்க வேண்டும். தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பயம் காரணமாக இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்கள் குறித்த சரியான விபரத்தை அதிகாரிகள், தெரிவிக்க மாட்டார்கள்.
மூளைக்காய்ச்சல் சிகிச்சைக்கு டாக்டர்கள் மற்றும் ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்வதை தவிர்த்து நிரந்தரமாக பணி நியமனம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.இந்த மருத்தவமனையில் கடந்த காலங்களில், பிரச்னை வரும் போது, ஒவ்வொரு முறையும், அனைத்து வசதிகளும் செய்து தருகின்றனர். ஆனால், எதுவும் நிறைவேறுவதில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...