ரெப்போ வட்டி விகிதம் 6 சதவீதமாக குறைப்பு: கடன்களுக்கான வட்டி குறைய வாய்ப்பு


எதிர்பார்த்ததை போலவே வங்கிகளுக்கு வழங்கப்படும் ரெப்போ ரேட் எனப்படும் குறுகிய
கால கடனுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பிருக்கிறது.

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் தலைமையிலான நிதி கொள்கை குழு கூடி, வங்கிகளின் வட்டி விகிதத்தை நிர்ணயிக்கிறது. அதன்படி இன்று(ஆகஸ்ட் 2-ம் தேதி) மும்பையில் இந்த கூட்டம் நடந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் விபரம் வருமாறு...

வங்கிகள் பெறும் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு 6 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இது 6.25 சதவீதமாக இருந்தது.

இதேப்போன்று ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு 5.75 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இது 6 சதவீதமாக இருந்தது.


வட்டி விகிதம் குறையும் :

ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால் வீடு, வாகனங்களுக்கான கடன் வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சில்லரை பணவீக்கம் குறைந்திருப்பதாலும், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள தொய்வை சரி செய்யும் விதமாகவும் இந்த வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...