6 லட்சம் ஆண்டுகளுக்கு பிறகு வெடிக்க இருக்கும் சூப்பர் எரிமலை


அமெரிக்காவில் ஆறு லட்சம் ஆண்டுகளுக்கு பிறகு எல்லோஸ்டோன் கால்டெரா
என்ற சூப்பர் எரிமலை வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உலகின் உள்ள 20 சூப்பர் எரிமலைகளில் ஒன்றான எல்லோஸ்டோன் கால்டெரா என்ற எரிமலை அமெரிக்காவின் வியோமிங் பகுதியில் உள்ளது. இந்த எரிமலை 6 லட்சம் ஆண்டுகளுக்கு ஒருமுறை வெடிக்கும். அப்படி வெடிக்கும் போது அதில் இருந்து வெளியாகும் சாம்பல் மற்றும் குழம்பு, மனிதர்கள் மற்றும் சுற்றுசூழலுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளனர்.
இதனால் எரிமலை வெடிக்கும் போது கடுமையான வெப்பத்தில் இருந்து பூமியை காக்க நாசா மையம் திட்டமிட்டுள்ளது. அதன்படி எரிமலையை சுற்றி 10 கி.மீ ஆழத்துக்கு துளையிட்டு அதில் தண்ணீரை பாய்ச்ச திட்டமிட்டுள்ளனர். அதன்மூலம் எரிமலை வெடிக்கும் போது வெப்பதன்மை குறைந்து குளிர்ச்சி அடையும். மேலும் இதற்காக ரூ.23 கோடி செலவிடப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...