85 ஆயிரம் அரசு பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்


தெலங்கானா மாநில அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் 85 ஆயிரம் பணியிடங்கள்
விரைவில் நிரப்பப்படும் என்று அந்த மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் உறுதியளித்தார்.
ஹைதராபாதில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கோல்கொண்டா கோட்டையில், நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி அவர் செவ்வாய்க்கிழமை தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
சுதந்திர தினம் கொண்டாடப்படும் இந்த மகிழ்ச்சியான தருணத்தில், வேலையின்றி இருக்கும் இளைஞர்களுக்கு ஒரு நல்ல செய்தியை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். இதுவரையிலும் எனது அரசு, 27,660 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு அளித்துள்ளது. இதுதவிர்த்து, மேலும் அரசு பணியிடங்களில் 84,876 பேரை விரைவில் நியமிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
தெலங்கானா தனிமாநிலம் கோரி நடைபெற்ற போராட்டத்தின்போது, புதிய மாநிலம் உருவானால் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என வாக்குறுதியளிக்கப்பட்டது. அந்த எண்ணிக்கையை விட அதிகமாக 1.12 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை எனது அரசு அளிக்கவுள்ளது.
ஹைதராபாதில் நவம்பர் மாதம் 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெறவுள்ள உலக தொழிலதிபர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப், அவரது மகள் இவாங்கா ஆகியோர் கலந்து கொள்ள இருக்கின்றனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மாநாட்டை சிறப்பாக நடத்தி, உலகம் முழுவதும் தெலங்கானாவின் புகழ் பரவுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எனது அரசு எடுத்து வருகிறது.
நாட்டிலேயே எளிதில் வர்த்தகம் செய்யும் மாநிலங்களின் பட்டியலில் நமது மாநிலம்தான் முதலிடத்தில் உள்ளது. இதுவரையிலும் நமது மாநிலத்தில் ரூ.1.01 லட்சம் கோடி மதிப்புக்கு முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. 4,118 புதிய தொழில்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 2.90 லட்சம் பேருக்கு தொழில்களை தொடங்க உரிமங்கள் அளிக்கப்பட்டுள்ளன. கடனில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளால், வங்கிகளுக்கு கடனை திருப்பி அளிக்க முடியாத நிலை காணப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, அவர்களது விவசாயத்துக்கு நிதியுதவி செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு முதல், விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.8 ஆயிரத்தை மாநில அரசு அளிக்கும்.
81 ஆண்டுகளுக்கு முன்பு, நிஸாமின் ஆட்சியின்கீழ் நமது பகுதியில் நில அளவை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு, நில அளவை மேற்கொள்ளப்படவில்லை. எனவே, மாநிலத்தில் மீண்டும் நில அளவை மேற்கொள்ள அரசு தீர்மானித்துள்ளது என்றார் சந்திரசேகர ராவ்.





SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...