அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ நேற்று நடத்திய ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் 90 சதவீத ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதன் காரணமாக 90 சதவீத ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்லவில்லை. 80
சதவீதத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணிக்கு செல்லவில்லை. இதனால் பள்ளிகளில் வகுப்புகளும், அரசு அலுவலகங்களில் பணியும் பாதிக்கப்பட்டது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அந்தந்த மாவட்ட தலைநகரில் ஒன்று திரண்டு கோரிக்கை முழக்கமிட்டனர்.
சென்னையில், ஜாக்டோ ஜியா ஒருங்கிணைப்பாளர் கணேசன் தலைமையில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சென்னை கல்லூரி சாலையில் உள்ள டிபிஐ வளாகத்தில் ஒன்று திரண்டனர். சுமார் 3 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் நேற்று காலை டிபிஐ வளாகத்திற்கு வந்ததால் அந்த பகுதியே ஸ்தம்பித்தது. மதியம் ஒரு மணி வரை அவர்கள் அந்த வளாகத்தில் அமர்ந்து கோரிக்ைக முழக்கமிட்டனர்.
அப்போது, ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் கணேசன் கூறியதாவது: புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டுவிட்டு, பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டு வர வேண்டும், மத்திய அரசின் 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை மாநில அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு 1.1.16 முதல் வழங்கும் வகையில் உடனடியாக மாநில அரசின் 8வது ஊதியக் குழுவை அமைக்க வேண்டும். மாநில அரசின் 8வது ஊதியக் குழுவின் அமல்படுத்துவதற்கு முன்னதாக இடைக்கால நிவாரணமாக 20 சதவீதம் வழங்க வேண்டும். 1.4.2003க்கு பிறகு அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கும் பழைய பென்ஷன் திட்டத்தை தொடர்வதற்கான பரிந்துரை வழங்க அமைக்கப்பட்ட வல்லுநர் குழு, பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை பரிந்துரையில் சேர்த்து விரைவில் முதல்வரிடம் வழங்க வேண்டும்.
அரசு ஊழியர், ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து விவாதிக்க ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் பிரதிநிதிகளை அழைத்து அரசு உடனடியாக பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். இல்லை என்றால், ஏற்கெனவே அறிவித்தபடி செப்டம்பர் 7ம் தேதி தொடர் வேலை நிறுத்தம் நடக்கும் என்றார். இந்த ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் காரணமாக தொடக்கக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் பணிக்கு வரவில்லை என்றும், 40 ஆயிரம் பேர் பணிக்கு வந்தனர் என்றும் தொடக்க கல்வித்துறையில் அரசுக்கு ஆதரவாக பணியாற்றும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் 56 சதவீதம் பேர் பணிக்கு வரவில்லை என்றும், 44 சதவீதம் பேர் பணிக்கு வந்தனர் என்றும் தெரிவித்தனர். மேலும், இந்த ஒரு நாள் வேலை நிறுத்தம் காரணமாக தொடக்க மற்றும் பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.40 கோடி சம்பளம் சேமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.