பாஸ்போர்ட் பெற புதிய முறை !!

பாஸ்போர்ட் தொடர்பான போலீஸ் விசாரணையை ஆன்லைன் மூலம் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பாஸ்போர்ட்டுக்கு ஒருவர் விண்ணப்பித்த பின்னர், போலீஸார் நேரில் சென்று அவர்களுடைய குற்றப்பின்னணி குறித்து விசாரணை மேற்கொள்வர். போலீஸாரின் தகவல்கள் பாஸ்போர்ட்
அலுவலகத்துக்கு அனுப்பப்படும். அதன்பின்னர், அதில் எந்தவித சிக்கலும் இல்லை என்று உறுதி செய்த பிறகு, பாஸ்போர்ட் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு நடைபெறும்.

இதனால், கால தாமதம் ஏற்படுவதாகக் கூறப்பட்டதையடுத்து, மத்திய அரசு இந்த புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் மெஹ்ரிஷி கூறுகையில், “உள்துறை அமைச்சகத்தின் குற்றம் மற்றும் குற்றவியல் கண்காணிப்பு நெட்வொர்க்ஸ் அண்ட் சிஸ்டம்ஸ் இணையதளத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பித்தவர்களது தகவல்கள் சரிபார்க்கப்படும் முறையை நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, நாடு முழுவதும் உள்ள 15,398 காவல் நிலையங்களும் இதில் ஒருங்கிணைக்கப்படும்.

இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தபின்னர், போலீஸார் நேரில் சென்று விசாரணை செய்ய அவசியம் இருக்காது. ஹேக்கிங் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், தரவுகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளச் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. அடுத்த ஆண்டுக்குள் அமல்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டத்தால் கால தாமதம் ஏற்படாது. இந்தத் திட்டம் ஏற்கெனவே பல மாநிலங்களில் அமலில் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...