9.3 கோடி பான் கார்டுகள் ஆதார் எண்ணுடன் இணைப்பபு வரும் 31 ஆம் தேதி கடைசி!!!


 9.3 கோடி பான் கார்டுகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதாக வருமான
வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் இதுவரை சுமார் 30 கோடி பேர் பான் கார்டு எடுத்துள்ளனர். இவர்களில் சுமார் 9.3 கோடிக்கும் அதிகமானோர் அதாவது 30 சதவீதத்திற்கும் அதிகமானோர் தங்கள் பான் கார்டுகளில் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என வருமான வரித்துறை சார்பில் கூறப்பட்டிருந்தது. அதற்காக வரும் 31ம் தேதி வரை கால அவகாசம் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜுன் மற்றும் ஜுலை மாதத்தில் சுமார் 3 கோடி பேர் தங்கள் பான் கார்டுடன் ஆதார் எண்ணையும் இணைத்திருந்தனர்.
இந்நிலையில் ஆண்டிற்கு 5 லட்சத்திற்கு அதிகமான வருமானம் உள்ளவர்களுக்கான வருமான வரி தாக்கலுக்கு கடந்த 5ம் தேதி கடைசி தேதி என அறிவிக்கப்பட்டிருந்து, வருமான வரி தாக்கலுக்கு ஆதார் பான் இணைப்பு காட்டாயமக்கப்பட்டிருந்ததால் அதன் மூலம் இதுவரை சுமார் 9.3 கோடிக்கும் அதிமானோர் தங்கள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
பான் - ஆதார் இணைப்பிற்கு இந்த மாதம் 31ம் தேதி வரை கால அவகாசம் இருப்பதால் இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...