வருமான வரித்துறை பட்டியலில்33 சதவீத நிறுவனங்கள் மாயம்!!!


நிறு­வ­னங்­கள் பதி­வா­ளர் அலு­வ­ல­கத்­தில் பதிவு செய்­துள்ள நிறு­வ­னங்­களில், 33 சத­வீத நிறு­வ­னங்­கள்,
வரு­மான வரித்­து­றை­யின் தக­வல் தொகுப்­பில் இடம் பெற­வில்லை’ என, பார்லி.,யில் தாக்­கல் செய்­யப்­பட்ட, மத்­திய தலைமை கணக்கு தணிக்கை அலு­வ­லக அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.
அதன் விப­ரம்:கடந்த, 2012 – 16ம் நிதி­யாண்­டு­களில், நிறு­வ­னங்­கள் பதி­வா­ளர் அலு­வ­ல­கத்­தில் பதிவு செய்த நிறு­வ­னங்­க­ளுக்கு ஏற்ப, வரு­மான வரித்­து­றை­யின், கணினி ஒருங்­கி­ணைப்பு, போக்­கு­வ­ரத்து, ஆய்வு மற்­றும் புள்­ளி­யி­யல் பிரி­வு­கள் அளித்த பட்­டி­யல் இல்லை. அவற்­றுக்கு இடையே, 2.94 லட்­சம் – 3.94 லட்­சம் வரை வித்­தி­யா­சம் உள்­ளது. அதா­வது, பதிவு செய்த நிறு­வ­னங்­களில், 33 சத­வீத நிறு­வ­னங்­கள், வரு­மான வரித்­துறை பட்­டி­ய­லில் இல்லை.
இந்­நி­று­வ­னங்­கள், வரு­மான வரி கணக்கை தாக்­கல் செய்­யா­மலோ அல்­லது தாக்­கல் செய்­வதைநிறுத்­தியோ இருக்­க­லாம்.இனி, இது போன்று நடக்­கா­மல்இருக்க, நிறு­வ­னங்­கள் வரு­மான கணக்கை தாக்­கல் செய்­யா­த­தற்கு, சம்­பந்­தப்­பட்ட பகு­தி­யின் வரி அலு­வ­லரை பொறுப்­பாக்­கும் வகை­யில், வரு­மான வரித்­துறை செயல் திட்­டத்தை உரு­வாக்க வேண்­டும்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...