ஓவியம் வரைவதில் உலக சாதனை!!



உலக அளவில் மிக நீளமான ஓவியங்களை வரைந்த தனி நபர்’ என்ற கின்னஸ் சாதனைக்கு
சொந்தக்கார ராகி இருக்கிறார், பரிமளகாந்த். 660 மீட்டர்- அதாவது 2166 அடி நீளத்திற்கு இவர் வரைந்த ஓவியங்கள் கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. சென்னையை சேர்ந்தவரான பரிமளகாந்த் முழு நேர ஓவியர் அல்ல. பி.டெக் படித்தவர். பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது வயது 25.

கல்லூரி படிப்பின்போது பொழுதுபோக்காக ஓவியம் வரைவதில் ஈடுபட்டவர், வேலைக்கு சென்ற பிறகும் அதை தொடர்ந்து செய்து, கின்னஸ் சாதனை யாளராக உருவெடுத்திருக்கிறார்.

“2013-ம் ஆண்டில்தான் எனக்கு ஓவியம் வரைவதில் நாட்டம் உருவானது. பேஸ்புக்கில் பதிவிடப்படும் ஓவியங்களை பார்த்தபோது அதை போல் வரைந்து பழகும் ஆர்வம் ஏற்பட்டது. பிரபலங் களின் உருவங்களை பென்சிலால் வரைந்து கல்லூரி நண்பர் களுக்கு பரிசளித்தேன். அவர்கள் நான் வரையும் ஓவியம் நன்றாக இருப்பதாக பாராட்டினார்கள். இதையடுத்து பிரபலங்களின் உருவங்களை மிகவும் நுட்பமாக வரையும் திறனை மெருகேற்றத் தொடங்கினேன். அதற்கு யூடியூப்பில் இடம்பெற்றிருக்கும் ஓவிய பயிற்சி கைகொடுத்தது.

ஒரு படத்தை அப்படியே பார்த்து வரைவதற்கும், அதனை அளவு எடுத்து வரைவதற்கும் இடையே உள்ள நுட்பமான வேறுபாடுகளை தெரிந்துகொண்டேன். அதற்கு முன்பு நான் வரைந்த படங்களில் முகம் மற்றும் உருவஅமைப்பில் சின்னச்சின்ன மாறுபாடுகள் தெரிந்தன.

பின்பு, பேப்பரில் ஒரு சதுர சென்டிமீட்டர் அளவுக்கு வரிசையாக கட்டங்களை போட்டுவிட்டு, அந்த கட்டங்களில் துல்லியமாக ஓவியங்களை வரைந்தேன். அது எளிமையாக இருந்தது. பார்க்க அழகாகவும், சிறப்பாகவும், துல்லியமாகவும் அமைந்தது. அந்த அடிப்படையில் நான் தொடர்ந்து ஓவியங்கள் வரைந்தது, என் திறமையை மெருகூட்டியது. உலகப் புகழ்பெற்ற தலைவர்களின் படங்களை எல்லாம் வரைந்து குவித்தேன்” என்கிறார்.

பரிமளகாந்த் சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருடைய தந்தை குமாரவிஜயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணி புரிந்து வருகிறார். தாயார் கெஜலட்சுமி குடும்பதலைவி.

நிறைய ஓவியங்களை வரைந்த நிலையில், பரிமளகாந்துக்கு வித்தியாசமாக ஓவியத்துறையில் ஏதாவது சாதிக்கவேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டிருக்கிறது. அந்த உந்துதலே கின்னஸ் சாதனையாக உருவாகியிருக்கிறது.

“நான் வரைந்த ஓவியங்களை நிறைய பேர் வாங்கிச் சென்றார்கள். தங்களுக்கு பிடித்தமானவர்களை வரைந்து தருமாறும் கேட்டார்கள். நண்பர்களின் பிறந்தநாள், திருமண நாள், திருமண வரவேற்பு உள்ளிட்ட விசேஷங்களுக்கு ஓவியம் வரைந்து கொடுத்தேன். எனது ஓவியத்தின் மீது அவர்கள் காட்டிய ஆர்வம், வேலைக்கு சென்று சம்பாதித்தாலும் ஓவியும் வரைவதை பின்தொடர வைத்துவிட்டது. இணையதளங்களில் ஓவியம் சம்பந்தமான தேடலையும் அதிகரிக்கச்செய்தது. அப்போது ஓவியத்தில் உலக சாதனை படைத்தவர்களை பற்றிய தகவல்களை தேடிப்பார்த்தேன். அவர்களின் ஓவிய சாதனைகளை பார்த்தபோது நாமும் ஏதாவது செய்யலாமே என்ற சிந்தனை உதித்தது.

தனி நபர்களின் சாதனைகளை தேடியபோது சிங்கப்பூரை சேர்ந்த ஒருவர் 626 மீட்டர் வரைந்து இருப்பதே கின்னஸ் சாதனையாக பதிவாகி இருந்தது. அதனை முறியடிக்கும் விதத்தில் ஓவிய பயிற்சியை மேற்கொண்டேன்” என்கிறார்.

கடல் வாழ் உயிரினங்களை மையக்கருவாக கொண்டு ஓவியங்களை தீட்டி கின்னசில் இடம் பிடித்திருக் கும் பரிமளகாந்த், அப்போது ஏராளமான சிரமங்களையும் எதிர்கொண்டிருக்கிறார். ஓவியம் வரைவதற்கு இடம் கிடைக்காமலும் தவித்திருக்கிறார்.

“ஏதாவது ஒரு பொதுஇடத்தில் வைத்துதான் கின்னஸ் சாதனைக்கு முயற்சிக்க வேண்டும். அதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று அனுமதி கேட்டேன். ஆனால் எங்கும் அனுமதி கிடைக்கவில்லை. இறுதியில் வேலை பார்க்கும் நிறுவனத்தில் கேட்கலாமா? என்று யோசித்தேன். அவர்கள் என்ன பதில் சொல்வார்களோ? என்ற தயக்கம் இருந்தது. வேறு வழியின்றி எனது நிறுவனத்திடமே ஓவிய ஆர்வத்தை வெளிப்படுத்தினேன். அவர்கள் உற்சாகப்படுத்தியதோடு அனுமதியும் கொடுத்தார்கள்.

1000 மீட்டர் பேப்பர் ரோல் வாங்கி வந்து ஓவியம் வரையத் தொடங்கினேன். ஓவியம் வரையும்போது இரண்டு பேர் சாட்சிகளாக இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் உதவி எதுவும் செய்யக்கூடாது என்பது விதி. முழுக்க முழுக்க எனது பங்களிப்பு மட்டுமே இருக்க வேண்டும். அதனை உறுதிப்படுத்த வீடியோவில் பதிவு செய்ய வேண்டும்.

நான் உட்கார்ந்து கொண்டே ஓவியம் வரைந்ததால் அவ்வப்போது இடுப்பு வலி ஏற்பட்டது. அந்த அறை இருபது அடி நீளம் கொண்டதாக இருந்ததால், ஒவ்வொரு இருபது அடி தூரத்துக்கு வரைந்ததும், ஓவியங்களை மடித்துவைத்தேன். மற்றவர்கள் ஓவியத்தின் அருகே வந்து கை வைத்தாலே அவர்கள் உதவுகிறார்களோ என்ற சந்தேகம் வந்துவிடும். அதனால் எல்லா வேலைகளையும் நானே தனி ஆளாக செய்ய வேண்டியிருந்தது. 50 வகை மீன்கள், ஆமைகள், ஆக்டோபஸ், திமிங்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...