தங்கம் வாங்குவதற்கு பான் கார்டை கட்டாயமாக்க
அரசு குழு பரிந்துரை செய்துள்ளது.
தங்கம் சார்ந்த பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டை கட்டாயமாக்கும் திட்டத்தை நிதி ஒழுங்குமுறைக் குழு முன்மொழிந்துள்ளது. இரண்டு லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பரிவர்த்தனைகளுக்கு மட்டுமல்லாமல் அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் பான் கார்டை கட்டாயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் தினசரி பரிவர்த்தனைக்கு வரம்புகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
வாரி ஏய்ப்பை தடுக்க இத்தகைய ஒழுங்குமுறைகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் தங்கம் சார்ந்த பரிவர்த்தனைகளை மின்னணு முறையில் பதிவு செய்யவும் இந்த குழு பரிந்துரை செய்துள்ளது. நாட்டில் அனைத்து மக்களுக்கும் இன்னும் பான் கார்டுகள் வழங்கப்படவில்லை. எனவே இதனால் பலரும் தங்கம் வாங்குவதில் சிக்கல்களை சந்திக்கக்கூடும்.
