இக்னோ 'அட்மிஷன்' அவகாசம் நீட்டிப்பு


 இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலையான, 'இக்னோ'வில், மாணவர் சேர்க்கைக்கு, வரும்,
18 வரை, அவகாசம் தரப்பட்டு உள்ளது. இதுகுறித்து, இக்னோவின் சென்னை மண்டல இயக்குனர், கிஷோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இக்னோவின், ஜூலை சுற்றுக்கான மாணவர் சேர்க்கை, வரும், 18 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. எனவே, விருப்பமுள்ளோர், www.onlineadmission.ignou.ac.in இணையதளம் வழியே விண்ணப்பிக்கலாம். இந்த நீட்டிப்பு, ஆறு மாத சான்றிதழ் படிப்புகளுக்கு பொருந்தாது. எம்.பி.ஏ., படிப்பில், ஏதாவது ஒரு இளநிலை பட்டம் பெற்றவர்கள் சேரலாம். அதற்கான, நுழைவு தேர்வு, செப்., 24ல் நடக்கும். அதற்கு, 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு, சென்னை நந்தனம், அண்ணா சாலையில் உள்ள, மண்டல அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...