மத்திய அரசு பணியிடங்களை கோட்டை விடும் தமிழக இளைஞர்கள்!!!


மத்திய அரசுத்துறைகளில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகளை, தமிழக இளைஞர்கள்
சரிவர பயன்படுத்திக் கொள்வதில்லை. போதிய விழிப்புணர்வு இல்லாததால், மத்திய பணி களில், தமிழகத்தின் பங்கு, தொடர்ந்து குறைந்து வருகிறது.
தமிழகத்தில், வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. வேலை வாய்ப்பு அலுவல கங்களில், 81.3 லட்சம் பேர், பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

'ரேங்க்' அடிப்படை

மாநில அரசு பணிகளுக்கு, பி.இ., பட்டதாரிகள் விண்ணப்பிப்பது அதிகரித்து வருகிறது.ஆனால், மத்திய அரசு துறைகளில் உள்ள பணியிடங் களில் சேர,தமிழக இளைஞர்கள் ஆர்வம் காட்டு வதில்லை. இதனால், தமிழகத்தில் உள்ள, மத்திய அரசு அலுவலகங்களில், பிற மாநிலத் தினரே அதிகம் பணியாற்றுகின்றனர்.

இது குறித்து, மத்திய அரசு ஊழியர் மகா சம்மே ளனத்தின், தமிழக பொருளாளரும், வருமான வரி ஊழியர் சங்கத் தலைவருமான, எம்.எஸ். வெங்கடேசன் கூறியதாவது:

மத்திய அரசு பணிகளில், 1996 வரை, பிராந்திய
வாரி பணி நியமனம் அமலில் இருந்தது. சொந்த பிராந்தியத்தில் பணிபுரிய விரும்புவோரின் விண் ணப்பத்தில், 'ஒய்' என்றும்; எந்த இடத்திலும் பணி செய்ய தயார் என்பவர், 'எக்ஸ்' என்றும் குறிப்பிடுவர்.

அதனால், மத்திய பணிகளில், அந்தந்த பிராந்தி யத்தை சேர்ந்தவர்களுக்கு, அதிக வாய்ப்பு கிடைத் தது. பின், 'ரேங்க்' அடிப்படையில், நியமனம் செய் யப்படுவதால், நிலைமை மாறிவிட்டது. இதனால், மத்திய பணிகளுக்குஅதிகம் பேர் விண்ணப்பிக்காத, தமிழகம் போன்ற மாநிலங்களில், பிற மாநில இளைஞர்கள் அதிகம் நியமிக்கப்படுகின்றனர். இவர்கள், வருமான வரித்துறை போன்ற களப் பணி யாற்றும் துறைகளில், மொழி தெரியாமல் திணறு கின்றனர். இதனால், பணிகள் பாதிக்கப்படுகின்றன.

மூன்று ஆண்டு பணி நிறைவு செய்தவர்கள், சொந்த மாநிலங்களுக்கு செல்ல முடியும். குடும்ப காரணங் களை கூறி, ஓர் ஆண்டுக்குள், சொந்த மாநிலத் திற்கோ,பக்கத்து மாநிலங்களுக்கோ செல்லலாம்.

ஒருவர் மட்டுமே!

இப்படி, ஏராளமானோர் சென்றதால், தமிழக வருமான வரித்துறையில், 5,000 பணியிடங்களில், 2,600 பணியிடங்கள் காலியாக உள்ளன. 2006 முதல் இந்த நிலை நீடிக்கிறது. இதனால், மற்றவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கிறது.மத்திய பணிக்கு, தமிழகத்தை சேர்ந்தோர், 2 சதவீதம் கூட விண்ணப் பிப்பது இல்லை. சமீபத்தில், தமிழகத்தில் நியமிக் கப்பட்ட, 208 வருமானவரி உதவியாளர்களில், 10 பேர் தான் தமிழகத்தை சேர்ந்தவர்கள்; 86 இன்ஸ் பெக்டர்கள் நியமிக்கப்பட்டதில், ஒருவர் மட்டுமே தமிழகத்தை சேர்ந்தவர்.

நாடு முழுவதும் ஒரு கோடி விண்ணப்பங்கள் வந்தால், தமிழகத்தில் இருந்து, 10 ஆயிரம் விண்ணப்பங்கள் கூட வருவதில்லை. வரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கையை பொறுத்து, ஒரு மாநிலத்தின் பணிஇடங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. இதனால், தமிழகத் தின் பங்களிப்பு குறைந்து வருகிறது. இருக்கும் சொற்ப பணியிடத்திலும் வேறு மாநிலத்தவர் தான் வருகின்றனர். தமிழக இளைஞர்கள், அதிக அளவில், மத்திய அரசு துறை தேர்வு களில் பங்கேற்பது அவசியம்.இவ்வாறு அவர் கூறினார்.

தீர்வு என்ன?

* மத்திய போட்டித் தேர்வு குறித்த விழிப்புணர் வை, மாநில அரசு ஏற்படுத்த வேண்டும். அதற் கான பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும்
* தட்டச்சு மற்றும்,சுருக்கெழுத்து வகுப்பு களுக்கு, ஊக்கம் அளிக்க வேண்டும்
* மத்திய அரசு துறை தேர்வு கேள்வி தாள்கள், ஹிந்தி ,றும் ஆங்கிலத்தில் உள்ளது போன்று பிராந்திய மொழிகளில் இருக்க வேண்டும்
* விண்ணப்பங்களில், பிராந்தியத்தில் பணி யாற்ற விருப்பத்தை, 'எக்ஸ், ஒய்' என குறிப் பிடப்படும் முறை மீண்டும் வர வேண்டும். அதற்கு, தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...