போராட்டம் களம் காண வாரீர் வாரீர். .


💐பங்களிப்பு ஓய்வூதியம்
பந்தாடப்பட்டு மறைய
உரிய ஊதியஉயர்வு
உற்றகாலம் கைகூட
அரைநாள் ஓய்வை
ஆர்ப்பாட்டத்திற்கு அர்ப்பணித்து
அணிவகுத்து வாரீர்! வாரீர்!


💐முழு ஓய்வூதியத்தை
முழுமையாய் பெற
ஓய்வை புறந்தள்ளி
ஒய்யாரமாய் நாம்வாழ
ஒரேயொரு நாளை
வேண்டாம் வேண்டாம்
அரைநாளை அர்ப்பணித்து
அணிதிரண்டு வாரீர்! வாரீர்!

💐பணிக்காக பதவிஉயர்வுக்காக
பறந்துசென்று நெடுந்தூரமெனினும்
பணியேற்க கலங்காத
பணிசெய்ய சுணங்காத
பாதங்கள் ஆர்ப்பாட்ட
பந்தலிலும் ஆர்ப்பரிக்க
பயணஞ்செய்தும் வாரீர்! வாரீர்!

💐வேலைநிறுத்தம் பணிநாளன்று
விடுமுறை நாளுமன்று
போராட்டநாளே என்பதை
உணர்ந்து உணர்வாய்
உரிமைக்காய் குரல்கொடுக்க
உரியகாலத்தில் வென்றெடுக்க
உற்சாகமாய் வாரீர்! வாரீர்!

💐பெண்ணியம் பேசும்
புண்ணியவான்களே, கனவான்களே!
கண்ணியம் தவறாமல்
கடமையைச் செய்யும்
மகளிரை உரிமை
மன்றத்திலும் போராட
உந்துசக்தியாய் இருந்து
அழைத்து வாரீர்! வாரீர்!

💐பங்களிப்பு ஓய்வூதியம்
பறந்துசெல்ல நமது
பங்களிப்பு அரைநாள்
ஓய்வு மட்டுமே என்பதை
ஓயாமல் உணர்த்தும்
சங்கத்துணையுடன் சங்கமிக்க
சாரைசாரையாய் வாரீர்! வாரீர்!

💐முழு ஓய்வூதியத்திலிருக்கும்
மூத்த ஆசிரியர்களே,
போராட்டத்தின் வீரியத்தை
புதியவர்களுக்கு தம்அனுபவப்
பாடமாய் புரியவைத்து
போராட்டப்புலிகளை உருவாக்க
புறப்பட்டு வாரீர்! வாரீர்!

💐போராட்ட வரலாறு
புரிந்தும் புரியாமலும்
தெரிந்தும் தெரியாமலும்
இருந்தாலும் பரவாயில்லை
புதுவரலாறு படைக்கும்
போராட்டக்களம் நோக்கி
வீறுகொண்ட வேங்கையாய்
இளஞ்சிங்கங்களே வாரீர்! வாரீர்!

💐வீதியில் இறங்கி
போராடாமல் கிடைக்காது
எதுவுமென்பதை திண்ணமாய்
புரிந்துகொண்ட பின்னரும்
சுணக்கங்காட்டி மந்தமாய்
வீட்டிலேயே முடங்கிவிடாமல்
வீறுநடை போட்டு வாரீர்! வாரீர்!



 *பா.அசோக்குமார்,*
*(வட்டார செயலாளர்            SSTA)*
*ஜாக்டோ-ஜியோ*,
*சத்தியமங்கலம்*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...