தற்போதைய நவீன தொழிற்நுட்ப யுகத்தில், வெளிப்படைத் தன்மை முக்கியம்;
ஒருவரது அடிப்படை தகவல்களை அளிப்பது, தனிநபர் சுதந்திரத்தை மீறுவதாகாது' என, சுப்ரீம் கோர்ட்டில், குஜராத் அரசு கூறியுள்ளது.
'ஆதார்' எண்ணை கட்டாயமாக்குவது
தொடர்பான வழக்குகளை, சுப்ரீம் கோர்ட் விசாரிக் கிறது. அதில், 'ஆதார் எண்ணை கட்டாயமாக்குவது, ஒருவரது தனிநபர்சுதந்திரத்தை மீறும் நடவடிக்கை' என, தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, ஒன்பது நீதிபதிகள் அடங்கிய, சுப்ரீம் கோர்ட் அமர்வு விசாரிக்கிறது.
இதில், குஜராத் மாநிலத்தின் சார்பில், மூத்த வழக் கறிஞர் ராகேஷ் திவேதி, நேற்று வாதிட்டதாவது: தனிமனித சுதந்திரம், ஒருவரது அடிப்படை உரிமை களின் ஒரு அம்சமாக, பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுகிறது.
அதே நேரத்தில், தற்போதைய நவீன தொழிற் நுட்ப யுகத்தில்,வெளிப்படைத்தன்மை மிகவும் முக்கியம். ஒருவரது அடிப்படை தகவல்களான, பெயர், வயது, முகவரி உள்ளிட்ட விபரங்களை தெரிவிப்பது, தனிநபர் சுதந்திரத்தை மீறுவதாக அமையாது. இவ்வாறு அவர் வாதிட்டார்