பள்ளி வகுப்பு அறையில் மின்விசிறி கழன்று விழுந்து மாணவன்-மாணவி படுகாயம்




திருவொற்றியூர் சத்தியமூர்த்தி நகரில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு
200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று காலை 10 மணியளவில் 1-ம் வகுப்பு அறையில் ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டு இருந்தார். சுமார் 20 மாணவ-மாணவிகள் வகுப்பில் இருந்தனர்.

அப்போது வகுப்பு அறையில் இருந்த மின்விசிறி திடீரென கழன்று கீழே விழுந்தது. வேகமாக சுற்றியபடி மின் விசிறி விழுந்ததால் அதன் இறக்கைகள் கீழே அமர்ந்து இருந்த மாணவ-மாணவிகள் மீது வெட்டியது. இதில் மாணவி மோனிஷா, மாணவன் கணேஷ் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. மற்ற மாணவ-மாணவிகள் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.

காயம் அடைந்த 2 பேரையும் உடனடியாக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவி மோனிஷாவுக்கு கன்னத்தில் தையல் போடப்பட்டது.

இதுபற்றி அறிந்ததும் மாணவ-மாணவிகளின் பெற்றோர் ஏராளமானோர் பள்ளிக்கு திரண்டு வந்து ஆசிரியர்களுடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...