உயரதிகாரிகளைக் கண்டித்து கறுப்பு பேட்ஜ் அணிந்த ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் !!

அரசின் விதிகளுக்கு மாறாக, தகுதி இல்லாதவர்களுக்கு வீட்டுக்கடன் கொடுக்கச்சொல்லி அதிகாரிகள் நெருக்கடிகொடுப்பதாகவும், அதிக அளவில் பணிச்சுமைகொடுப்பதைக் கண்டித்தும், நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



 தமிழக அரசின் 'பசுமை வீடு' திட்டத்தின் கீழ், தகுதியானவர்களுக்கு வீட்டுமனைகளை வழங்க கடன் கொடுக்கலாம் என அறிவித்துள்ள நிலையில், அரசின் அறிவிப்புக்கு மாறாக, தகுதியே இல்லாத நபர்களுக்கு வீடு கட்ட கடன் வழங்க மேலதிகாரிகள் தங்களை வற்புறுத்துவதாக, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.




மேலும், நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, உயர் அதிகாரிகள் பல்வேறு தரப்பில் பணிச் சுமைகளை வழங்குவதாகவும் புகார் எழுந்துள்ளது. மேலதிகாரிகளின் இது போன்ற தன்னிச்சையான செயலுக்குக் கண்டனம் தெரிவித்து, நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள ஊரக வளர்ச்சித்துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் ஊழியர்கள் இன்று கறுப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு வந்து, தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...