நீட் தேர்வுக்கு விலக்கு : தமிழக அரசின் அவசர சட்ட முன்வரைவு ஏற்பு


நீட் தேர்விலிருந்து தமிகழத்திற்கு ஓராண்டு விலக்கு அளிக்க வழிவகை
செய்யும் அவசர சட்டத்திற்கான முன்வரைவை, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இன்று காலை 10 மணியளவில் சமர்ப்பித்தார். இந்த சட்ட முன்வரைவை ஏற்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு கேட்டுக் கொண்டதன்படி நீட் தேர்வில் விலக்கு அளிப்பதற்கான கூடுதல் ஆவணங்களையும் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்தார். தமிழக அரசின் அவசர சட்ட முன்வரைவு மற்றும் கூடுதல் ஆவணங்களை சுகாதாரத்துறை , மனிதவள மேம்பாட்டு துறை மற்றும் சட்ட அமைச்சத்திற்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த 3 அமைச்சகங்களும் ஒப்புதல் அளித்த பிறகு, அவசர சட்ட முன்வரைவு ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் எனவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...