ஒரிஜினலுடன்தான் ஓட்ட வேண்டும் !!

‘செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அசல் ஓட்டுநர் உரிமம் கையில் இருக்க வேண்டும்’ என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகப் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று (ஆகஸ்ட் 22) சென்னை பல்லவன் இல்லத்தில் போக்குவரத்துத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர்
செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: “தமிழகத்தில் வாகன விபத்துகளைக் குறைக்கவும் உயிரிழப்புகளைத் தடுக்கவும் அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. போக்குவரத்து விதிகளை மீறியதாக 9,500 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. செப்டம்பர் 1ஆம் தேதி முதல் வாகன ஓட்டிகள் தங்களின் அசல் ஓட்டுநர் உரிமத்தைக் கையில் வைத்திருக்க வேண்டும். அசல் ஓட்டுநர் உரிமம் காணாமல்போனால் மாற்று உரிமம் உடனே தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் நெடுஞ்சாலைகள் சிறப்பாக உள்ளன. நெடுஞ்சாலைகள் சிறப்பாக இருப்பதால் வேகம் அதிகரித்து விபத்து ஏற்படுகின்றன” என்று அவர் தெரிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...