நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு கிடையாது!!!


நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்குக் கிடைக்க வாய்ப்பே இல்லை’ என்று
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழக மாணவர்களைப் பாதிக்கும் மத்திய அரசு கொண்டுவந்த நீட் தேர்வுக்குத் தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நீட் விலக்குப் பெறுவதற்கு தமிழக அரசும் தொடர்ந்து போராடி வருகிறது. இதற்காக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தி வந்தார். நேற்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் இதுதொடர்பாக ஆலோசனை நடத்த டெல்லிக்குச் சென்றுள்ளார்.

இந்தச் சூழ்நிலையில் டெல்லியில் நேற்று (ஜூலை 3) செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மாணவர்கள் ஏமாற வேண்டாம். நீட் தேர்வு கண்டிப்பாக வந்தே தீரும். எனவே, அரசியல்வாதிகள் பேச்சை நம்பி மாணவர்கள் ஏமாற வேண்டாம். நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர தீர்வு கிடைக்காது. அப்படி நிரந்தர தீர்வளித்தால் அது தமிழக மாணவர்களின் அழிவுக்கு வழிவகுக்கும். நீட் தேர்வில் திமுக-வின் நிலைப்பாடு பகல் வேடமாகவும், காங்கிரஸின் நிலைப்பாடு இரட்டை வேடமுமாக உள்ளது. நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகவே உள்ளது. எனவே, மாணவர்கள் அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...