சங்கமா நமக்கு சோறு போடுது !!!

*"வீதியில இறங்கி போராடுறவன் ஒரு சில பேராவது இருப்பதால மட்டும் தான் நம்மில் பல பேர் வீட்டுக்குள்ள இருந்து நிம்மதியா சாப்பிட முடியுது.

*"நாம உழைச்சாத்தான் நமக்குச் சோறு "*

*"நமக்கு ஏம்ப்பா சங்கம்,  போராட்டமெல்லாம் ?"*

இது  வெகுளித்தனமான பேச்சா? இல்ல! வெவகாரமான பேச்சா? என்பது நபரை பொறுத்தது . எப்படி இருந்தாலும் இது ஒரு வெளங்காத பேச்சு ...


  உழைச்சா சோறு உண்டுன்னு உனக்கு உத்திரவாத படுத்தினது எது ?

உழைச்சா கூலி கொடுக்கனும்னு நிர்ணயம் பண்ணினது எது ?

நீ செய்யிற வேலைக்கு கட்டாயமா இவ்வளவு ஊதியம் வாங்கணும்னு உனக்கு சொல்லி கொடுத்தது யாரு ?

மூணு வேளை கஞ்சிக்கு மட்டுமே இருபத்தினாலு மணி நேரமும் வேலை பாத்த அடிமை சமூகம் தான இது!

இத மாத்தினது சங்கங்கள் இல்லையா ? அந்த சங்கங்களில் முன்னெடுக்கிற போராட்டங்கள் இல்லையா ?

சங்கங்களை ஒதுக்கி வச்சிட்டு இங்க எதுவுமே கிடையாது.

*"சங்கங்களில்  நீங்கள் தலையிடாவிட்டாலும்
அது உங்கள் பிரச்சனைக்காக தலையிடும் "*

 தன்னுடைய சுயத்தையும் இழந்து இந்த சமூகத்திற்காக வீதியில் இறங்கி போராடுபவனை பாராட்டாவிட்டாலும் தயவு செய்து கொச்சை படுத்தாதீர்கள் ! ஜோக்கராக பார்க்காதீர்கள்.

இவ்பூ உலகை இயக்குவது இரண்டு... ஒன்று மனிதன்... மற்றொன்று ...மனிதனுக்கான மனிதன்,,...
*தங்கம் செய்யாததை சங்கம் செய்யும்*

*நாளை ஒரு போராட்டம். வா தோழா வீதிக்கு.*

*வீதியில் இறங்காமல் விடியாது எதுவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...