குட்கா விவகாரத்தில் சிக்கிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு
, 92 ஏக்கர் நிலம் உள்ளிட்ட சொத்துக்களை வருமான வரித்துறை நேற்று அதிரடியாக முடக்கியது.
குட்கா வழக்கில் ஏற்கனவே சிக்கிதவிக்கும் விஜயபாஸ்கருக்கு, அடுத்த அடியாக, தேர்தல் வழக்கு தொடர்பாக, அவருக்கு சொந்தமான, புதுக்கோட்டை மாவட் டத்தில் உள்ள, 92 ஏக்கர் நிலத்தை, வருமான வரித்துறையினர் நேற்று முடக்கினர். வருமான வரித்துறை அனுப்பிய கடிதத்தை தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்ட நில பதிவாளர் சசிகலா , அதை முடக்கி உள்ளார். அத்துடன், அவரது மொத்த சொத்துகளும் முடக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வருமான வரித்துறையின் பரிந்துரையின் பேரில் அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துக்களை முடக்கி நடவடிக்கை எடுத்த புதுக்கோட்டை மாவட்ட நில பதிவாளர் சசிகலா அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து மாற்றம் செய்யப்பட்ட சசிகலா விருதுநகர் மாவட்ட பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்