எவரெஸ்ட் சிகரத்தை மீண்டும் அளக்க முடிவு !!

 எவரெஸ்ட் சிகரத்தை மீண்டும் அளந்து பார்க்க இந்திய அரசும், நேபாள அரசும் முடிவு செய்துள்ளது.
சிக்கிம் மாநிலத்தில் குறிப்பிட்ட உயரத்தில் உள்ள பகுதிகள் தங்களுக்குச் சொந்தம் என சீனா கூறி வருகிறது. இதையடுத்து அந்தப் பகுதிகளை அளந்து பார்க்க இந்தியா முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தையும் அளந்து பார்க்க இந்தியாவும்,
நேபாளமும் முடிவு செய்துள்ளன. கடந்த 2015ம் ஆண்டு நேபாளத்தில் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் தொடர்பாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கடந்த 1955ம் ஆண்டு எடுக்கப்பட்ட அளவுகளின் படி எவரெஸ்ட் சிகரம் 8,848 மீட்டம் உயரம் கொண்டதாக அறியப்படுகிறது.
இந்நிலையில் நிலநடுக்கத்தால் சிகரத்தின் உயரத்தில் மாறுபாடு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே, அதனை மீண்டும் அளக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக இந்திய சர்வே துறை தலைவர் வி.பி. ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...