யு.ஜி.சி-க்கு மாற்று: தேசிய உயர்க்கல்வி ஆணையம்?



இந்தியாவில் செயல்பட்டுவரும் பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி), அகில இந்திய தொழில்நுட்பக்
கல்விக்கான குழு (ஏ.ஐ.சி.டி.இ) என்ற இந்த இரண்டு அமைப்புகளுக்கு மாற்றாக ஒரு ஒற்றை உயர்க்கல்வி ஒழுங்குமுறை ஆணையத்தைக் கொண்டுவருவதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஒரு யோசனையைத் தெரிவித்துள்ளது.

உயர்க்கல்வியில் குழப்பமாக உள்ள தொடர்பில்லாத சில நடைமுறைகளை களையும் நோக்கத்தில் மத்திய அரசு, உயர்க்கல்வி ஒழுங்குமுறை நிறுவனம் என்ற ஓர் ஒற்றை அமைப்பை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகமும் நிதி ஆயோக்கும் இணைந்து தொழில்நுட்பக் கல்வி மற்றும் தொழில்நுட்பம் அல்லாத கல்வி நிறுவனங்களை ஒரு குடையின்கீழ் கொண்டுவருவதற்கு ஆரம்ப கட்ட வேலைகள் நடந்துள்ளன. இந்த இரண்டு அமைப்புக்கும் எந்த தலைமையும் இல்லை.

இந்த நிலையில், நேற்று ஆகஸ்ட் 13ஆம் தேதி இந்தப் பிரச்னை தொடர்பாக, நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் உபேந்திர குஷ்வாஹா கூறுகையில், “பல்கலைக்கழக மானியக்குழுவான யு.ஜி.சி., அனைத்து இந்திய தொழில்நுட்பக் கல்விக்கான குழு ஆகிய இரண்டையும் இணைப்பதற்கு ஓர் ஒற்றை உயர்க்கல்வி ஒழுங்குமுறை குழு அமைப்பதற்கு, இந்த மாதிரி பரிந்துரை திட்டம் தற்போது ஏதும் இல்லை” என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரிகளைக் கேட்டால் அவர்கள் கனத்த மௌனத்தையே பதிலாகத் தருகின்றனர்.

இந்த ஒற்றை உயர்க்கல்வி ஒழுங்குமுறை ஆணையம் என்ற கருத்து ஒன்றும் புதிதல்ல. இது முன்பு இருந்த அரசுகளால், ஏற்கெனவே பல குழுக்களால் பரிந்துரைக்கப்பட்டதுதான். தேசிய அறிவுக்குழு 2006, உயர்க்கல்விக்கான சுதந்திரமான ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க பரிந்துரை செய்துள்ளது. உயர்க்கல்வி குறைகளைக் கலைந்து புதுப்பித்தலுக்கான குழுவும் (2009) தேசிய உயர்க்கல்வி ஆணையம் என்ற பெயரில் ஓர் உச்ச நிறுவனத்தை அமைக்கப் பரிந்துரை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...