புதுடில்லி: பார்லி. மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. லோக்சபாவில் கேள்வி
ஒன்றுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா அளித்த பதிலில்,
''நாடு முழுவதும், சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம், குழந்தை பெற்றெடுப்பது அதிகரித்து வருகிறது. நேரமில்லாதது, சுய விருப்பம் என, இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்
படுகின்றன. ''மத்திய அரசு சுகாதார சேவை திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் நடந்த, 31 ஆயிரத்து, 296 பிரசவங்களில், 55.75 சதவீதம், அதாவது, 17ஆயிரத்து, 450 பிரசவங்களில், சிசேரியன் மூலமே குழந்தைகள் பிறந்துள்ளன,'' இவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்