திறனாய்வுத்தேர்வுகள பறறி் அறிவோம்!!


8 ஆம் வகுப்பு பயிலும்  அரசு பள்ளி மாணவர் தன் கல்லூரி படிப்புக்கான
செலவுகளுக்காக பெற்றோரை நம்பி அல்லாமல் தன் வங்கி கணக்கில் இருந்து எடுத்து செலுத்தமுடியும்.

   10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர் தன் உயர்கல்வி செலவு முழுவதையும்  பெற்றோரை நம்பி அல்லாமல் தன் வங்கி கணக்கில் இருந்து எடுத்து செலுத்தமுடியும்.


   இது சாத்தியமே எப்படி என்றால் பள்ளியில் கற்கும் மாணவர்கள்

 அரசால் நடத்தப்படும் திறனாய்வுத்தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற்றால் போதும் .

என்ன தேர்வு? யார் யார் எழுதலாம்?எப்படி வினாக்கள் இருக்கும்? போன்ற தங்களின் ஐயங்களை களையவே இந்த பதிவு.

   மத்திய மற்றும் மாநில அரசுகளால் ஆண்டுதோறும் (NMMS, TRUSTS, NTSE )  என திறனாய்வுத்தேர்வுகள் நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 500 மற்றும் ரூ. 1250என அவர்தம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது .

தேர்வின் பெயர்: தேசிய வருவாய்வழி திறனாய்வுத்தேர்வு (National Mean cum Merit Scholarship)-NMMS

  தேர்வு எழுத வேண்டிய வகுப்பு:

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் / ஊராட்சி/ நகராட்சி / மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்கள்

 தேர்வு எழுதுவதற்கான தகுதிகள்:

  7ஆம் வகுப்பில் 55% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்கள்

  தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் 50% பெற்றிருந்தால் போதும்.

  பெற்றோரின் ஆண்டு வருமானம் ரு1,50,000 க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

Ø  தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை :

  அக்டோபர் மாதத்தில் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும்.

  www.tndge.tn.nic.in என்ற இணையதளத்தில் online -ல்  பள்ளி தலைமையாசிரியர் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் .

  தேர்வுக்கட்டணம் ரூ. 50

Ø  தேர்வு நடைமுறை:

   ஒரு மதிப்பெண் வினாக்கள் சரியான விடையைத்தேர்ந்தெடுத்தல்(objective type questions ) முறையில் கொடுக்கப்படும்.

ü  மனத்திறன் தேர்வு (MAT) -MENTAL ABILITY TEST

 90 வினாக்கள் - 90மதிப்பெண்கள் - 90 நிமிடங்கள்

இடைவேளை – 20 நிமிடங்கள்

ü  பாடத்திறன் தேர்வு – (SAT) -SCHOLASTIC ABILITY TEST

 90 வினாக்கள் -  90மதிப்பெண்கள் - 90 நிமிடங்கள்

Ø  தேர்ச்சி முறை:

 MAT மற்றும் SAT  தேர்வுகளில் குறந்தபட்சம் 40% பெற்ற மாணவர்கள் தர அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் .

(தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் 32% பெற்றால் போதும்).

 மாற்றுத்திறனாளிகளுக்கு 3% இட ஒதுக்கீடு உண்டு.

  ஒவ்வொரு மாநிலத்திற்கும் பயிலும் மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் தேர்வு செய்யப்படும் மாணவர் எண்ணிக்கை மாறுபடும்.

  நாடு முழுவதும் 1,00,000மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 500 வீதம் 4ஆண்டுகள் ( 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை )  தொடர்ந்து அவர்தம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர் திறனாய்வுத்தேர்வு: (TAMILNADU RURAL STUDENTS TALENT SEARCH EXAM) TRUSTS

Ø        தேர்வு எழுத வேண்டிய வகுப்பு:

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் / ஊராட்சி/  உள்ள கிராமப்புற பள்ளிகளில் பயிலும் ஒனபதாம்  வகுப்பு மாணவர்கள்

Ø   தேர்வு எழுதுவதற்கான தகுதிகள்:

  8 ஆம் வகுப்பில் 55% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்கள்

 தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் 50% பெற்றிருந்தால் போதும்.

  பெற்றோரின் ஆண்டு வருமானம் ரு1,50,000 க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

Ø  தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை :

 ஜூலை அல்லது செப்டமப்ர்  மாதத்தில் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும்.

  www.tndge.tn.nic.in என்ற இணையதளத்தில் online -ல்  பள்ளி தலைமையாசிரியர் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் .

  தேர்வுக்கட்டணம் ரூ. 10

Ø  தேர்வு நடைமுறை:

  ஒரு மதிப்பெண் வினாக்கள் சரியான விடையைத்தேர்ந்தெடுத்தல்(objective type questions ) முறையில் கொடுக்கப்படும்.

வினாத்தாள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும்.

  மனத்திறன் தேர்வு (MAT) - MENTAL ABILITY TEST

 90 வினாக்கள் - 90மதிப்பெண்கள் - 90 நிமிடங்கள்

இடைவேளை – 20 நிமிடங்கள்

  பாடத்திறன் தேர்வு – (SAT) -SCHOLASTIC ABILITY TEST

 90 வினாக்கள் -  90மதிப்பெண்கள் - 90 நிமிடங்கள்

Ø  தேர்ச்சி முறை:

  மாணவர்கள் பெறும்  மதிப்பெண்களின்  தரநிலை அடிப்படையில் வருவாய் மாவட்ட அளவில் வரிசைபடுத்தப்படுவர்

.

  வருவாய் மாவட்டத்திற்கு 50மாணவர்கள் மற்றும் 50மாணவிகள் தேர்வு செய்யப்படுவர்.

  ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் ரூ. 1000 வழங்கப்படும்.

தேசிய திறனாய்வுத்தேர்வு

 ( NATIONAL TALENT SEARCH EXAMINATIONS)-NTSE

Ø        தேர்வு எழுத வேண்டிய வகுப்பு:

        அரசு மற்றும் அரசு உதவி பெறும் / ஊராட்சி/ நகராட்சி / மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள்

         

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...