அபராத வட்டி தள்ளுபடி: ஓராண்டுக்கு அமல்!!

நிலுவை தவணை தொகைகளை மொத்தமாக செலுத்துவோருக்கு,
அபராத வட்டி தள்ளுபடி செய்யும் திட்டம், ஓராண்டுக்கு அமலில் இருக்கும்' என, வீட்டு வசதி வாரியம் அறிவித்துள்ளது.

வீட்டு வசதி வாரியத்தில் ஒதுக்கீடு பெற்று, தவணை தொகையை முறையாக செலுத்தாதோருக்கு அபராத வட்டி விதிக்கப்படும். இது, அசலுடன் சேர்க்கப்பட்டு, தொகை அதிகரிப்பதால், ஒதுக்கீட்டாளர்கள் நிலுவை தொகையை செலுத்தாமல் விட்டு விடுகின்றனர்.

இவர்களின் நலன் கருதி, அபராத வட்டி தள்ளுபடி திட்டம், 2016ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதற்கான அரசாணை, 2017 ஜூன், 15ல் வெளியிடப்பட்டது. ஆனால், இத்திட்டம் அமலுக்கு வருவதை அதிகாரிகள் நிறுத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில், இத்திட்டத்தை செயல்படுத்த, வீட்டு வசதி வாரிய நிர்வாக இயக்குனர், ஜெயச்சந்திர பானு ரெட்டி உத்தரவிட்டுள்ளார். மேலும், இத்திட்டம், 2018 ஆக., 26 வரை அமலில் இருக்கும் என, அறிவித்துள்ளார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...