மனிதாபிமானமற்ற செயல்: சிறை நுழைவுக்கு சிறுவர்களின் முகத்தில் முத்திரை குத்தி பதிவு


மத்திய பிரதேசம் போபால் மத்திய சிறைச்சாலையில்  அதிகாரி ஒருவர் அதிர்ச்சியூட்டும்

மனிதாபிமானமற்ற  நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளார்.
ஒரு சிறுவனும் ஒரு பெண்ணும் - போபால் மத்திய சிறை ஊழியர்களால்  முகங்களில் முத்திரை குத்தப்பட்டு சிறைக்குள் நுழைந்ததற்கான பதிவு செய்யபட்டு உள்ளனர்.

திங்கள் கிழமை அன்று ரக்ஷா பந்தன் கொண்டாடுவதற்காக, குழந்தைகளின் ஒரு நெருங்கிய உறவினர், அவர்களை சந்திக்கச் சென்றார்கள் அப்போது இந்த விஷயம் தெரியவந்து உள்ளது.

இந்த சம்பவம் பொதுமக்களின் மத்தியில் ஆத்திரத்தை ஊட்டியது. இதை தொடர்ந்து மாநில அரசு இது குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது.

இது குறித்து சிறைத்துறை அமைச்சர் குசும் மெடிடேலே கூறியதாவது:

"முகத்தில் முத்திரை குத்திய  சம்பவம் குறித்து  விசாரணைக்கு நாங்கள் உத்தரவிட்டுள்ளோம். நான் இதை வன்மையாக  கண்டிக்கிறேன். சம்பவத்திற்கு பொறுப்பான அதிகாரிகள்  விசாரனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

, குழந்தைகளுக்கான மாநில ஆணையத்தின் தலைவர் டாக்டர் ராகவேந்திரா கூறியதாவது:-

இந்த சம்பவம் ஒரு பயங்கரமான சம்பவமாகும். சிறைச்சாலைகளில் சிறுவர்களின்  முகங்கள் மீது நுழைவு முத்திரையை  குத்தியது குழந்தைகள் தங்கள்  வாழ்நாள் முழுவதும் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற உண்மையை சிறைத்துறை அதிகாரிகள் கவனிக்கவில்லை.

"சம்பவத்துடன் தொடர்புடைய சிறை அதிகாரிகளிடமிருந்து நாங்கள் அறிக்கையை எதிர்பார்க்கிறோம் இவ்வாறு அவர் கூறினார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...