இந்தியாவின் மூன்றாம் மிகப் பெரிய தனியார் வங்கி சேவையான ஆக்ஸிஸ் வங்கி
எஸ்பிஐ வங்கி எப்படிச் சேமிப்பு கணக்கு மீதான வட்டி விகிதத்தினைச் சில நாட்களுக்கு முன்பு 0.50 சதவீதம் குறைத்ததோ அதே போன்று குறைத்துள்ளது.
வருடத்திற்கு 50 லட்சம் ரூபாய்க்கும் குறைவாகப் பரிவர்த்தனை செய்யப்பட்ட வங்கி சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் அனைவருக்கும் இந்த வட்டி விகித குறைப்பு இருக்கும்.
அதே நேரம் 50 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகப் பணப் பரிவத்தனை செய்தவர்களுக்கு 4 சதவீத வட்டி விகித லப்பத்தினையே அளிக்கும். எஸ்பிஐ மற்றும் ஆக்சிஸ் வங்கியைத் தொடர்ந்து பிற வங்கிகளும் குறைக்க வாய்ப்பு உள்ளது