திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்
போஸ் வேட்புமனுவில் ஜெயலலிதா கைரேவை வைத்த விவகாரம் தொடர்பாக ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என திமுக சார்பில் போட்டியிட்ட சரவணன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தமிழக தலைமை தேர்தல் கமிஷனர் ராஜேஷ் லக்கானி வரும் 24ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது