நேர்மையாக செயல்படுகிறேன்: செங்கோட்டையன்!!!


அமைச்சர்
சந்தித்தார்.
செங்கோட்டையன் பத்திரிகையாளர்களை
அப்போது அவரிடம், ஆசிரியர் இடமாற்றம் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கி ஆசிரியர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்ட விவகாரங்களில் வெளிப்படை தன்மை இல்லை என பா.ம.க., இளைஞர் அணி தலைவர் அன்புமணி குற்றச்சாட்டு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அவர், பள்ளி கல்வித்துறை அமைச்சராக வெளிப்படைத்தன்மையுடனும், மனசாட்சிக்கு கட்டுப்பட்டும் செயல்படுகிறேன். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: மாணவர்களுக்கு உலக தரம் வாய்ந்த அளவிலான புதிய லேப்டாப் வழங்கப்படும். 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 3 விதமான சீருடை வழங்கப்படும். நீட் தேர்வு க்கு தமிழக மாணவர்கள் பயிற்சி பெற 54 ஆயிரம் கேள்விகள் அடங்கிய சி.டி., தரப்படும். இவ்வாறு அவர் பேசினார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...